India vs West Indies 2nd T20 score updates Tamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த வியாழக்கிழமை நடந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கில் 7 ரன்களிலும், பின்னர் வந்த சூர்யகுமார் 1 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய திலக் அரைசதம் விளாசினார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம்சன் 7 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பாண்டியா 24 ரன்களிலும், அக்சர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிஷ்னோய் 8 ரன்களிலும், அர்ஷ்தீப் 6 ரன்களிலும் இருக்க இந்திய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹொசன், ஜோசப், செப்பர்டு தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் திணறினாலும், பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அரைசதம் அடித்த பூரன் 67 ரன்களில் அவுட் ஆனார். பவுல் 22 ரன்களும், ஹெட்மயர் 21 ரன்களும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஹொசைன் 16 ரன்களும், ஜோசப் 10 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.
வெஸ்ட் இண்டீஸ் 18.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய தரப்பில் பாண்டியா 3 விக்கெட்களையும், சஹல் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் ஆடும் லெவன் பின்வருமாறு:-
இந்தியா:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், ரவி பிஷ்னோய்.
வெஸ்ட் இண்டீஸ்:
பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், அக்கேல் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil