India vs West Indies Cricket Score : இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று(13.9.18) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் முடிந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி 138 ரன்கள் பின்தங்கி உள்ளது.
போட்டியின் தொடக்கத்தில் 311 ரன்களை கைப்பற்றி இருந்த மேற்கிந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணி சார்ப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
With that wicket of Roston Chase, @y_umesh pick up his second 5-wkt haul in Tests.#INDvWI pic.twitter.com/nO4Z85vgce
— BCCI (@BCCI) 13 October 2018
அதன் பின்பு களம் இறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் நம்பிக்கை நட்சத்திரமான ப்ரித்வி ஷா ஆட்டம் இழந்தார். இன்றைய ஆட்டத்தில் ப்ரித்வி ஷா அரை சதம் அடித்தார். இது அவரின் 134 ஆவது அரை சதம் ஆகும்.
FIFTY!@PrithviShaw brings up his half-century off 39 deliveries in the 2nd Test at Hyderabad.
Updates - https://t.co/U21NN9DHPa @Paytm #INDvWI pic.twitter.com/r8Ykomtocd
— BCCI (@BCCI) 13 October 2018
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்றைய தினம் (12.9.18) இராண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் தொடங்கியது.
இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது ஷமிக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக இடம் பெற்றார்.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. அந்த அணி 589.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, தொடர்ந்த விளையாடியது.அதன் பிறகு சீரான இடைவெளியில் வெஸ்ட் இண்டீசுக்கு விக்கெட்டுகள் சரிந்தன.
சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அடுத்தடுத்து ‘செக்’ வைத்தார். இதனால் நிலைகுலைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 113 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை (38.5 ஓவர்) பறிகொடுத்து பரிதவித்தது. நாள் முடிவில் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது. ரோஸ்டன் சேஸ் 98 ரன்களுடனும் (174 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), தேவேந்திர பிஷூ 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.