Advertisment

சரிந்து நிமிர்ந்த விண்டீஸ்: முதல் நாளில் 295 ரன்கள் குவிப்பு

India vs West Indies 2nd Test Match:இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் முதல் நாளில் சரிந்து நிமிர்ந்தது விண்டீஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs West Indies 2nd Test Match Score: இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் ஸ்கோர்

India vs West Indies 2nd Test Match Score: இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் ஸ்கோர்

India vs West Indies Cricket Score: ஹைதராபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாளில் சரிவை சந்தித்த விண்டீஸ் அணி பிறகு நிமிர்ந்தது. 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது.

Advertisment

விண்டீஸ் அணி (முன்னர் மேற்கு இந்திய தீவுகள் அணி என அழைக்கப்பட்டது) இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த விண்டீஸ் அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் ஹைதராபாத் மைதானத்தில் இந்தியாவை சந்திக்கிறது.

இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் விண்டீஸ் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் சீனியர் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் வாய்ப்பு பெற்றார். 3 சுழல், 2 வேகம் என்கிற காம்பினேஷனில் இந்தியா தாக்குதலை தொடங்கியது.

வடிவேலு பாணியில் சொல்வதானால் முதல் நாளான இன்று, ‘எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது. ஃபினிஷிங்தான் சரியில்லை’! விண்டீஸ் அணியில் முன்வரிசை வீரர்களான பிராத்வெய்ட் (14 ரன்கள்), கிரன் போவெல் (22 ரன்கள்), ஷாய் ஹோப் (36 ரன்கள்), ஷிம்ரோன் ஹெட்மைர் (12 ரன்கள்), சுனில் அம்ப்ரிஸ் (18 ரன்கள்) ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அதாவது, 38.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை விண்டீஸ் இழந்தது. எனவே 200 ரன்களுக்குள் விண்டீஸ் வீழ வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

ஆனால் பின்வரிசையில் ரோஸ்டன் சேஸ் (ஆட்டமிழக்காமல் 98 ரன்கள்), ஷேன் டவ்ரிச் (30 ரன்கள்), ஜேசன் ஹோல்டர் (52 ரன்கள்) ஆகியோரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் விண்டீஸ் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 2-ம் நாள் ஆட்டம் நாளை (அக்டோபர் 13) தொடர்கிறது.

 

SEO Tit India vs West Indies 2nd Test Match Day 1 at Hyderabad Score: இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் ஹைதராபாத் ஸ்கோர்

SEO Description- India vs West Indies 2nd Test Match Day 1 at Hyderabad Score on Star Sports 1 Hindi, Hotstar: இந்தியா - விண்டீஸ் ஹைதராபாத் 2-வது டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்

Excerpt- India vs West Indies 2nd Test Match:இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் முதல் நாளில் சரிந்து நிமிர்ந்தது விண்டீஸ்.

Image Caption- India vs West Indies 2nd Test Match Score: இந்தியா - விண்டீஸ் 2-வது டெஸ்ட் ஸ்கோர்

Body Content- India vs West Indies Cricket Score:

Keywords-

Live Cricket Score
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment