India vs West Indies 3rd ODI When And Where To Watch Live Telecast Live Streaming
India vs West Indies 3rd ODI: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நாளை(டிச.22) நடைபெறுகிறது.
Advertisment
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியது.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
Advertisment
Advertisements
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், சென்னையில் நடந்த முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற, விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்யில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.
கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் - ராகுலின் ஓப்பனிங் நம்பிக்கை அளிக்கிறது. ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் கூட நல்ல ஃபார்மில் உள்ளனர்.
கோலி முதல் ஆட்டத்தில் 4 ரன்னிலும், 2-வது ஆட்டத்தில் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். இதனால் அவரது பேட்டிங் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
பந்து வீச்சில் முகமது சமி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காயம் அடைந்த தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இன்டீஸ் அணியில் எவின் லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன் அச்சுறுத்துகின்றனர். பந்து வீச்சில் காட்ரெல், ஹோல்டர், ஜோசப், ரோஸ்டர் சேஸ் ஆகியோர் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 132 போட்டியில் இந்தியா 63-ல், வெஸ்ட் இண்டீஸ் 63-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 போட்டியில் முடிவில்லை.
இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஆட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியை காணலாம்.
தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.