Advertisment

IND vs WI 3rd T20 Score: சூர்யகுமார், திலக் அதிரடி; 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா வெற்றி

பவல் அதிரடியில் 159 ரன்கள் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்; சூர்யகுமார், திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தால் எளிதாக வென்ற இந்தியா; 1-2 என தொடரை தக்கவைப்பு

author-image
WebDesk
New Update
India vs West Indies 3rd T20 Live Score in tamil

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: 3வது டி20 போட்டியில் இன்று மோதல்

India vs West Indies Live Score, 3rd T20: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில், முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2-வது ஆட்டத்திலும் இதே போல நெருங்கி வந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இந்திய அணியினர் சரிவில் இருந்து மீள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது தான். அதனால் இந்திய வீரர்கள் ஒருங்கிணைந்து தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். மறுபுறம், இன்றைய ஆட்டத்திலும் வெஸ்ட்இண்டீஸ் வெற்றியை ருசித்தால் இந்தியாவுக்கு எதிராக 7 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றும்.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரு அணிகளின் விளையாடும் வீரர்களின் விவரம்

இந்தியா : சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்

வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், அக்கேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஓபேட் மெக்காய்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர். மேயர்ஸ் 25 ரன்களில் அவுட் ஆனார். அவர் அக்சர் பந்தில் அர்ஷ்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய சார்லஸ் 12 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரது விக்கெட்டையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

அடுத்து பவல் களமிறங்கிய நிலையில், மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ப்ரண்டன் 42 ரன்களில் அவுட் ஆனார். இவரின் விக்கெட்டையும் குல்தீப் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஹெட்மயர் 9 ரன்களில் வெளியேறினார். செப்பர்ட் களமிறங்கி கம்பெனி கொடுக்க பவல் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பவல் 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். செப்பர்ட் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்களையும், அக்சர் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் கில் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் அதிரடி காட்டினார். மறுமுனையில் ஆடி வந்த கில் 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக சூர்யகுமாருடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார். அணியின் எண்ணிக்கை 121 ஆக இருந்தப்போது சூர்யகுமார் அவுட் ஆனார். அவர் 44 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்ததாக திலக் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி வெற்றி இலக்கை அடைந்தனர். இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திலக் 49 ரன்களுடனும், பாண்டியா 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோசப் 2 விக்கெட்களையும், மெகாய் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்தியா 1-2 என்ற கணக்கில் தொடரை தக்க வைத்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Hardik Pandya India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment