கோ, ரோ, ரா ராகத்தில் டரியலான வெஸ்ட் இண்டீஸ்! – டி20 தொடரை வென்றது டீம் இந்தியா

India vs West Indies 3rd T20: இந்தியா வெற்றி

By: Dec 11, 2019, 10:56:48 PM

India vs West Indies 3rd T20I Cricket Score: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிச.11) நடைபெற்றது. இதில், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று டி20 போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது.

ரோஹித் 34 ரன்களில் 71 ரன்களும், லோகேஷ் ராகுல் 56 பந்துகளில் 91 ரன்களும், விராட் கோலி 29 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர்.

பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், பொல்லார்ட் 68 ரன்களும், ஹெட்மயர் 41 ரன்களும் எடுக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது.

IE Tamil commentary

West Indies in India, 3 T20I Series, 2019Wankhede Stadium, Mumbai 09 August 2020

India 240/3 (20.0)

vs

West Indies 173/8 (20.0)

Match Ended ( Day - 3rd T20I ) India beat West Indies by 67 runs

Live Blog
India vs West Indies 3rd T20I Cricket Score Updates, Wankhede Stadium, Mumbai : இந்தியா வெற்றி
22:46 (IST)11 Dec 2019
இந்தியா வெற்றி

இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. 

22:23 (IST)11 Dec 2019
பொல்லார்ட் அவுட்...

இருந்தாலும், இந்த மும்பை ஃபேன்ஸுங்களுக்கு இவ்ளோ பெரிய ட்ரீட் அமைஞ்சிருக்கக் கூடாது. 

பொல்லார்ட் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து, புவனேஷ் ஓவரில் கேட்ச் ஆனார்.

22:18 (IST)11 Dec 2019
பொல்லார்ட் 50...

என்ன இருந்தாலும், அவுகளும் அந்த ஊருக்காரர் தானே... எத்தனை மேட்சை பார்த்திருப்பார்....

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், தனி ஆளாக பொல்லார்ட் அரைசதம் அடித்து போராடி வருகிறார்.

22:02 (IST)11 Dec 2019
ஹெட்மயர் அவுட்

ஒருவழியாக, ஹெட்மயர் 41 ரன்களில் குல்தீப் யாதவ் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

21:21 (IST)11 Dec 2019
நிகோலஸ் பூரன் அவுட்....

டேஞ்சரஸ் யங் மேன் நிகோலஸ் பூரன், ரன் ஏதும் எடுக்காமல் சாஹர் ஓவரில், ஷிவம் துபேவின் மிக மிக அபாரமான கேட்ச்சினால் வெளியேற்றப்பட்டார். 

21:15 (IST)11 Dec 2019
ஷமி யம்மி கண்டினியூஸ்...

டெஸ்ட் போட்டிகளில் எதிரணிகளை கலங்கடித்துக் கொண்டிருந்த ஷமி, இந்தப் போட்டியில் தான் வீசிய முதல் ஓவரிலேயே, வெறும் 1 ரன் மட்டும் விட்டுக் கொடுத்து, 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இருந்து இந்தியாவை வெளியேற்றிய பில் சிம்மன்சை வெளியேற்றி இருக்கிறார்.

21:08 (IST)11 Dec 2019
கிங் அவுட்...

புவனேஷ் ஓவரில், கிங் 5 ரன்களில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

20:50 (IST)11 Dec 2019
241 ரன்கள் இலக்கு

இந்திய அணி  20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்துள்ளது. 7 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார் கேப்டன் கோலி.

20:38 (IST)11 Dec 2019
கோலி 50....

இந்திய கேப்டன் விராட் கோலி, 21 பந்துகளில் அரைசதம்.... 230 வந்துடுமா?

20:36 (IST)11 Dec 2019
204-2

18 ஓவர்கள் முடிவில், இந்தியா இந்தா.. இந்தா என 200 ரன்களைக் கடந்தது

20:18 (IST)11 Dec 2019
எங்கய்யா ரன் ரேட்டு?

ரோஹித் இருந்தவரை 11க்கும் அதிகமாக இருந்த ரன் ரேட், இப்போது 10க்கு வந்துவிட்டது. 

சிறிது ஓய்வுக்குப் பிறகு, ரோஹித் ரன் ரேட்டைப் பார்த்த போது...

20:11 (IST)11 Dec 2019
பண்பாளர் பண்ட் அவுட்....

நமது மரியாதைக்குரிய அன்பர், பண்பர் பண்ட் அவர்கள், 0 ரன்களில் பொல்லார்டு ஓவரில் பல்லாங்கு அடித்தும் அவுட்டானார்.

20:05 (IST)11 Dec 2019
ரோஹித் அவுட்..

34 பந்துகளில் 71 ரன்கள் விளாசிய ஹிட்மேன், வில்லியம்ஸ் ஓவரில் கேட்சாகி வெளியேறினர்.

அடுத்து பண்ட்டை இறக்கி விட்டிருக்கிறார்கள்.

19:39 (IST)11 Dec 2019
200 நோக்கி இந்தியா... ரோஹித் 50

 சும்மா 170, 180லாம் வெஸ்ட் இண்டீசுக்கு போதாது என்று கருதிய இந்திய ஓப்பனர்கள் தற்போது செய்து கொண்டிருப்பது சும்மா கிழி....

ரோஹித் 23 பந்துகளில் அரைசதம்...

19:26 (IST)11 Dec 2019
400 வது சர்வதேச சிக்ஸர்

400 வது சர்வதேச சிக்ஸர் அடித்த ரோஹித் ஷர்மா

டெஸ்ட் - 52
ஒருநாள் - 232
டி 20 - 116

19:21 (IST)11 Dec 2019
இந்தியா 50*

4.1 வது ஓவரில், இந்தியா தனது 50வது ரன்னை எட்டியது. 

ரன் ஓடும் போது ரோஹித்துக்கு கால் போச்சு!!! 

19:17 (IST)11 Dec 2019
நாலு ஓவர் போச்சு நாரதா!!

யய்யா ராகுலு... நீ பிட்சை ரீடு பண்ணது போதும்... கொஞ்சமாச்சும் அடி... நாலு ஓவர் முடிஞ்சுப் போச்சு!!

19:13 (IST)11 Dec 2019
சிங்கம் களம் இறங்கிடுச்சே....

ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய காட்ரெலின் முதல் பந்தை சிக்ஸருக்கும், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கும் 'விராட்டினார்' நமது ரோஹித்.

இதுவே விராட் கோலியாக இருந்தால், விராட்டினார் என்று போட்டிருக்கலாம்.. . இது ரோஹித்தாச்சே... அப்போ விரட்டினார் தான் கரெக்டு.

19:04 (IST)11 Dec 2019
இந்திய ஓப்பனர்கள் களத்தில்...

இந்திய ஓப்பனர்கள் ரோஹித் - ராகுல் களத்தில்.... 

இரண்டு ஆட்டங்களிலும் சொதப்பிய ரோஹித் நிலைமை இன்றைக்கு....

19:00 (IST)11 Dec 2019
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் XI

லென்டி சிம்மன்ஸ், எவின் லெவிஸ், பிராடன் கிங், ஷிம்ரோன் ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர், கேரி பியரி, ஹெய்டன் வால்ஷ், ஷெல்டன் காட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ்

18:55 (IST)11 Dec 2019
இந்தியா பிளேயிங் XI

விராட் கோலி(c), ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(w), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, புவனேஷ் குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ்

18:50 (IST)11 Dec 2019
இந்தியா பேட்டிங்

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். (பிறவு... பேட்டிங்கா பண்ணுவான்!!) 

இந்திய அணியில் இரண்டு மாற்றமாக ஜடேஜாவுக்கு பதிலாக முகமது ஷமியும். சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ்வும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Web Title:India vs west indies 3rd t20i live cricket score updates ind vs wi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X