India vs West Indies cricket 4th T20 match score updates: சனிக்கிழமை ஹர்திக் பாண்டியாவின் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவல் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்தியா அதே அணியுடன் களமிறங்கியது, அதாவது யசஸ்வி ஜெய்ஸ்வால் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதால் இஷான் கிஷான் மீண்டும் வெளியில் உள்ளார். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 3 மாற்றங்களைச் செய்துள்ளது, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் மற்றும் ஒடியன் ஸ்மித் ஆகியோர் தொடக்க வரிசையில் இடம்பிடித்துள்ளனர்.
புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் தொடரை 2-2 என சமன் செய்யும் வாய்ப்புடன் இந்திய அணி நான்காவது டி20 ஐ விளையாடுகிறது. முந்தைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தொடக்கக் கூட்டணி அணிக்கு இன்னும் கவலையாக உள்ளது.
இரு அணி விளையாடும் வீரர்களின் விவரம்:
வெஸ்ட் இண்டீஸ் : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், அகேல் ஹோசின், ஓபேட் மெக்காய்
இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார்
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேயர்ஸ் மற்றும் பிரண்டன் களமிறங்கினர். மேயர்ஸ் 17 ரன்களிலும், பிரண்டன் 18 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய ஹோப் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். மறுமுனையில் இறங்கிய பூரன் மற்றும் பவல் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக ஹோப் உடன் ஹெட்மயர் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். இருவரும் சிறப்பாக ஆடி வந்த நிலையில் ஹோப் 45 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த செப்பர்டு 9 ரன்களிலும் ஹோல்டர் 3 ரன்களிலும் அவுட் ஆகினர்.
சிறப்பாக ஆடிய ஹெட்மயர் அரைசதம் விளாசினார். அடுத்ததாக ஸ்மித் களமிறங்கிய சிறிது நேரத்தில் ஹெட்மயர் 39 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித் 15 ரன்களும், ஹொசைன் 5 ரன்களும் எடுத்திருந்தப்போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், குல்தீப் 2 விக்கெட்களையும், அக்சர், சாஹல், முகேஷ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஷ்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் திணறினர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 77 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.
அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது. இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 81 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை சமன் செய்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.