Advertisment

3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

LIVE Score, India vs West Indies 5th ODI: இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை கைப்பற்றி சாதனையை தொடருமா இந்திய அணி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

IND vs WI 5th ODI LIVE Cricket Score: திருவனந்தபுரத்தில் முதல் முறையாக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (1.11.18) மோதுகின்றனர். இதில் இந்திய அணி தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் போட்டிகள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி சமனில் முடிந்தது.

மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்பிகையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LIVE Score, India vs West Indies 5th ODI Live Cricket Score Updates: இந்தியா - விண்டீஸ் 5-வது ஒருநாள் போட்டி லைவ் ஸ்கோர்:

5:43 PM :  ஒரு நாள் போட்டிகளில் ஆறாவது முறையாக தொடர்ந்து கோலி தலைமையில் சொந்த மண்ணில் தொடரை வென்றது இந்தியா அணி.

,

5:02 PM: 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்தியா. 3 -1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

4:49 PM:  200 சிக்ஸர்களை ஒரு நாள் போட்டிகளில் பதிவு செய்தார் ரோஹித் சர்மா. இந்த இலக்கை தொட இவருக்கு 187 இன்னிங்ஸ் தேவைப்பட்டது

4:25 PM: தவான் விக்கெட்டை தொடக்கத்திலே இழந்த போதிலும், இந்தியா நிதானமாக ஆடி வருகிறது. 7 ஓவர்கள் முடிவில் இந்தியா 30 ரன்களை எடுத்துள்ளது. கோலி (12) மற்றும் ரோஹித் (12) களத்தில் உள்ளனர்.

4:13 PM: இந்தியா பந்துவீச்சை சமாளிக்க முடியமால் 104 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இது தான் ஒரு நாள் போட்டிகளில் இவர்களது குறைந்த ஸ்கோர்.

,

3:55 PM: அவுட். 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 34 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அள்ளினார்.

3:35 PM: அவுட். குல்தீப் சூழலில் சிக்கினார் கீமோ பால். லாங் ஆன் திசையில் சென்ற அந்த பந்தை அம்பட்டி ராயுடு அசத்தலாக பிடித்தார். 29 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 95-8  

3:17 PM: ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் மறுமுனையில் பொறுப்பாக ஆடி வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் - 87/6

2:43 PM :  இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் வி.வி.எஸ் லட்சுமண் பிறந்த நாள். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த 281 ரன்னை மறக்க முடியுமா?

,

2:34 PM:  மார்லன் சாமுவேல்ஸ் - குறைந்த ஆவெரேஜ் (ஒடிஐ தொடர்களில்)

11.00 ICC சாம்பியன்ஸ் கோப்பை, 2006

12.80 இந்த தொடரில்*

13.60 vs ஆஸ்திரேலியா, 2012

19.00 vs ஆஸ்திரேலியா,2003

2:23 PM: அவுட். ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் மார்லன் (24) விக்கெட்டை பறிகொடுத்தார். கவர்ஸ் திசையில் நின்று கொண்டிருந்த கேப்டன் கோலி சுலபமான கேட்ச் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் 37/3.  

2:13 PM: சமீப போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லன் சாமுவேல்ஸ், கலீல் பந்து வீச்சில் அடுத்தடுத்து பௌண்டரிகளை விளாசி வருகிறார். 9 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் - 30/2

,

1:50 PM: இந்தியாவின் 47வது ஒரு நாள் ஸ்டேடியம் என்ற பெருமையை பெறுகிறது

இன்று போட்டி நடக்கும் "கிறீன் பீல்ட் ஸ்டேடியம்"

1:42 PM: அவுட். அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பும்ரா பந்து வீச்சில் ஷாய் ஹோப் போல்டு ஆனார் . வெஸ்ட் இண்டீஸ் - 3/2

1:34 PM: அவுட். முதல் விக்கெட்டை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். கிரான் பவல் ரன் எதுவும் சேர்க்காமல் புவனேஸ்வர் பந்துவீச்சில் வெளியேறினார்.

1:31 PM:

இது தான் திருவனந்தபுரத்தில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டி.  

,

1:16 PM: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு. இந்திய அணி சென்ற போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களம் இறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றங்கள்; ஆஷ்லீ நர்ஸ், சந்தர்பால் ஹேம்ராஜ் ஆகியோர்க்கு பதிலாக தேவேந்திர பிஷூ மற்றும் தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

12:50 PM: மும்பையில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் மிக மோசமாக தோற்ற விண்டீஸ் அணி இன்று வெற்றி பெற கடும் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு போட்டியில் வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என பெற்றிருக்கும் விண்டீஸ் இந்த ஆட்டத்தில் ஜெயித்தால் தொடரை சமன் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

12:30 PM: போட்டி நடக்கும் திருவனந்தபுரத்தில் இன்று பிற்பகலில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் தாமதமாக தொடங்கவோ அல்லது சில ஓவர்கள் குறைக்கப்படவோ வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியின் மூலம் கிடைக்கும் லாபத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய அணி கடைசியாக சொந்த மண்ணில் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதன் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது இல்லை.

தொடர்ச்சியாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இமாலய சாதனையை படைத்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை கைப்பற்றி சாதனையை தொடருமா? அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணி கேரள மண்ணில் தொடரை வென்று, புதிய வரலாற்றை படைக்குமா? என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.

Kerala India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment