Advertisment

ஹைதராபாத் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி, 2-0 என தொடரை கைப்பற்றியது

இந்தியா - விண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலமாக 2-0 என தொடரை கைப்பற்றியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs West Indies Cricket Score Day 3 Live

India vs West Indies Cricket Score Day 3 Live

இந்தியா - விண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலமாக 2-0 என தொடரை கைப்பற்றியது. 2-வது இன்னிங்க்ஸில் வெறும் 127 ரன்களில் விண்டீஸ் சுருண்டது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை எட்டினர். எனவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்த டெஸ்டை வென்றதுடன், தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

Advertisment

India vs West Indies Cricket Score Day 3 Live : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட்  போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(அக்.14) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்தது. அதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இராண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவல் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பண்ட் 85 ரன்களுடனும், ரஹானே 75 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரஹானே 80 ரன்களிலும், ரிஷப் பண்ட் 92 ரன்களிலும் வெளியேற, இந்தியா 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2-வது இன்னிங்க்ஸில் வெறும் 127 ரன்களில் விண்டீஸ் சுருண்டது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் விக்கெட் இழப்பின்றி அந்த இலக்கை எட்டினர். எனவே 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்த டெஸ்டை வென்றதுடன், தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

இன்றைய ஆட்டத்தில் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் கார்டு இதோ,

India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment