இந்திய அணியில் ப்ரித்வி ஷா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.
Advertisment
இதில் நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணியின் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ப்ரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துள் தாகுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மும்பைக்காரரான ப்ரித்வி ஷாவுக்கு இந்திய டெஸ்ட் அணியில் அதுவும் ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. கடந்த இங்கிலாந்து தொடரில், பெஞ்ச்சில் உட்காரவைக்கப்பட்டிருந்தார். இப்போது அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
Advertisment
Advertisements
வாழ்த்துகள் ப்ரித்வி!.
அதேசமயம், செம ஃபார்மில் இருக்கும் மாயங்க் அகர்வாலை ஏன் 12 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலில் தேர்வு செய்யவில்லை? என்று புரியவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் கூட, போர்ட் பிரெசிடென்ட் அணிக்காக தொடக்க வீரராக ஆடிய மாயங்க் அகர்வால் 90 ரன்கள் அடித்திருந்தார். மற்றொரு தொடக்க வீரர் ப்ரித்வி ஷா 8 ரன்னில் அவுட்.
அதேபோல், 'இங்கிலாந்து தொடரில் அரைசதம் அடித்தார், பவுலிங் போட்டு விக்கெட்டும் எடுத்து எங்களை இம்ப்ரெஸ் செய்தார்' என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கருண் நாயரை நீக்கிவிட்டு, அவருக்கு பதில் ஹனுமா விஹாரிக்கு இத்தொடரில் வாய்ப்பளித்தது. ஆனால், அவருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கான 12 மென் லிஸ்ட்டில் வாய்ப்பு தரப்படவில்லை.
ப்ரித்வி ஷா, ஒப்பனிங் பேட்ஸ்மேன். ராகுல் டிராவிட்டின் கண்டுபிடிப்பான ப்ரித்வி, இதுவரை 14 முதல் தர போட்டியில் 26 இன்னிங்ஸில் விளையாடி, 1418 ரன்கள் குவித்துள்ளார்.
அதிகபட்சம் – 188
ஆவரேஜ் – 56.72
ஸ்டிரைக் ரேட் – 76.69
சதம் – 7
அரை சதம் – 5
சச்சின் மற்றும் இந்திய ஜூனியர் அணி கோச் ராகுல் டிராவிட்டின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் ப்ரித்வி ஷா தான். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையிலேயே ப்ரித்வி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
மேலும் பார்க்க: ப்ரித்வி ஷாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய சுவாரஸ்யமான நேர்காணல்