இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: முரளி விஜய், தவான் நீக்கம்!

ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் அக்டோபர் 4 முதல் 9 வரை நடைபெறுகிறது. 2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் அக்டோபர் 12 முதல் 16 வரை நடைபெறுகிறது.

இதற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால், சத்தீஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், ஷர்துல் தாகுர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

முரளி விஜய் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பும்ரா, புவனேஷ் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தில் அவதிப்படுவதால் அணியில் சேர்க்கப்படவில்லை.

டெஸ்ட் தொடர்:

முதல் டெஸ்ட்: 4-8 அக்டோபர் – ராஜ்கோட்

இரண்டாவது டெஸ்ட்: 12-16 அக்டோபர் – ஹைதராபாத்

ஒருநாள் தொடர்:

முதல் ஒருநாள்: 21st அக்டோபர் – குவஹாத்தி

இரண்டாவது ஒருநாள்: 24st அக்டோபர் – இந்தூர்

மூன்றாவது ஒருநாள்: 27th அக்டோபர் – புனே

நான்காவது ஒருநாள்: 29th அக்டோபர் – மும்பை

ஐந்தாவது ஒருநாள்: 1st நவம்பர் – திருவனந்தபுரம்

டி20 தொடர்:

முதல் டி20: 4th நவம்பர் – கொல்கத்தா

இரண்டாவது டி20: 6th நவம்பர் – லக்னோ

மூன்றாவது டி20: 11th நவம்பர் – சென்னை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close