விராட் கோலி, புவனேஷ்வர் குமாரின் ஆட்டத்தால் இந்திய அபார வெற்றி

India vs West Indies Match Result:இந்தியாவின் ஒழுக்கமான பந்துவீச்சால் இலக்கை எட்ட முடியாமல்  59 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது.

India vs West Indies Match Result:இந்தியாவின் ஒழுக்கமான பந்துவீச்சால் இலக்கை எட்ட முடியாமல்  59 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ind vs wi 2nd ODI results:

ind vs wi 2nd ODI results:

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2 வது ஒருநாள் முடிவு: போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகளை இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வென்றது.

Advertisment

முதலில் களமிறங்கிய இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு  280 என்ற இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் அதிக பட்சமாக கேப்டன் விராட் கோலி 120 ரன்கள் எடுத்து தனது 42-வது சதத்தை நிறைவு செய்தார்.

இருப்பினும், இரண்டாவது பாதியில் மழை தடங்கல் ஏற்பட்டதால்  மேற்கிந்திய தீவுகளின் இலக்கு 46 ஓவர்களில் 270 ஆக திருத்தப்பட்டது((டி / எல் முறை) ).

கிறிஸ் கெயில்,  நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட அந்த அணிக்கி இது சாத்தியமான இலக்கே என்றாலும், இந்தியாவின் ஒழுக்கமான பந்துவீச்சால் இலக்கை எட்ட முடியாமல்  59 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது.

Advertisment
Advertisements

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளையும்,  முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை பெற்றுள்ளது.

Live Cricket Score

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: