Advertisment

India vs Zimbabwe Score 5th T20I : ஜிம்பாப்வே தோல்வி; 4-1 கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

India vs Zimbabwe Score 5th T20I: ஹராரேயில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு நடைபெறும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India vs Zimbabwe Live Score 5th T20I

4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்தியா

India vs Zimbabwe Score 5th T20I | இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அதிர்ச்சி வெற்றி பெற்றது. அடுத்த 3 ஆட்டங்களிலும் இந்தியா ஜிம்பாப்வேவை வெளுத்து வாங்கியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே 1ஆட்டத்திலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 5வது ஆட்டம் இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் ஸ்டேடியத்தில் நடந்தது.

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஷ்வால், சுப்மன் கில் களம் இறங்கினார்கள். 

Advertisment

சஞ்சு சாம்ஸன் அரை சதம்

இந்நிலையில், முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் அதிரடிய ஆடி 45 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி அடங்கும்.

அவருக்கு பக்க பலமாக ரியான் பராக் 24 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷிவம் துபே 2 சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 12 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார்.

ஜிம்பாப்பே அணி தரப்பில் ஷிக்கந்தர் ராஸா, ரிச்சர்ட்டு, பிராண்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். ப்ளெஸிங் 2 விக்கெட் எடுத்தார்.

ஜிம்பாப்வே தோல்வி

அடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டும், ஷிவம் துபே 2 விக்கெட்டும், அபிஷேக் சர்மா, வாசிங்டன் சுந்தர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஜிம்பாப்பே தரப்பில் மருமனி 27 ரன்னும், பென்னட் 10 ரன்னும், டியன் மயர்ஸ் 34 ரன்னும், ஃபராஸ் அக்ரம் 27 ரன்னும் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினார்கள். இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆங்கிலத்தில் வாசிக்க : India vs Zimbabwe Live Score 5th T20I: Shubman Gill departs, IND 64/3 vs ZIM in Harare

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Jul 14, 2024 19:53 IST
    42 ரன்னில் இந்தியா வெற்றி


    ஜிமபாப்பே அணிக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தனதாக்கியது.
    இந்தத் தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.



  • Jul 14, 2024 19:50 IST
    18.2 ஓவரில் 124/9 ஜிம்பாப்வே


    ஜிம்பாப்வே அணி 18.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 10 பந்துகளில் 44 ரன்கள் தேவை.



  • Jul 14, 2024 19:40 IST
    2 விக்கெட் வீழ்த்திய முகேஷ் & ஷிவம் துபே

    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசிய முகேஷ் குமார் 2 விக்கெட்டும், 4 ஓவர்கள் வீசிய ஷிவம் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    மேலும் வாசிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.



  • Jul 14, 2024 19:38 IST
    17 ஓவரில் 109/7 இழந்த ஜிம்பாப்வே

    ஜிம்பாப்வே அணி 17 ஓவரில் 109 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 59 ரன்கள் தேவை.



  • Jul 14, 2024 19:37 IST
    ஜிம்பாப்வே திணறல்; 99/7 விக்கெட் காலி

    இந்தியாவுக்கு எதிரான 5வது டி-20 பேட்டியில் ஜிம்பாப்வே அணி 16.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 20 பந்துகளில் 66 ரன்கள் தேவை.



  • Jul 14, 2024 18:30 IST
    தொடக்கமே அதிர்ச்சி; முக்கிய விக்கெட்டை பறிகொடுத்த ஜிம்பாப்வே

    ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லே மாதேவரே 3 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
    அடுத்து பிரைன் பென்னட் களம் கண்டுள்ளார். ஜிம்பாப்வே 2.1 ஓவரில் 15 ரன்னுக்கு 1 விக்கெட் இழந்துள்ளது. வெற்றிக்கு 153 ரன்கள் தேவை.



  • Jul 14, 2024 18:26 IST
    2 விக்கெட் எடுத்த ப்ளெஸிங் முஸாரபனி

    இந்தியாவுக்கு எதிராக 5வது டி-20 போட்டியில் ஜிம்பாப்வேயின் ப்ளெஸிங் முஸாரபனி 2 விக்கெட் வீழ்த்தினார். ஷிக்கந்தர் ராஸா, ரிச்சர்டு நாகராவா, பிராண்டன் மவுட்டா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.



  • Jul 14, 2024 18:24 IST
    இந்திய அணி வீரர்கள் ரன் ரேட்

     

    யஷ்வந்த் ஜெய்ஸ்வால் 12, சுப்மன் கில் 13, அபிஷேக் சர்மா 14, சஞ்சு சாம்சன் 58, ரியான் பராக் 22, ஷிவம் துபே 26 ரன்கள் எடுத்து இருந்தனர்.
    மேலும், ரிங்கு சிங் 11 ரன்னிலும் வாசிங்டன் சுந்தர் 1 ரன்னிலும் கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.



  • Jul 14, 2024 18:22 IST
    சஞ்சு சாம்சன் அரை சதம்

     

    அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 45 பந்துகளில் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி உடன் 58 ரன்கள் குவித்தார்.



  • Jul 14, 2024 18:21 IST
    ஜிம்பாப்வேக்கு 169 ரன்கள் இலக்கு

    ஜிம்பாப்வேக்கு எதிரான 5வது டி20 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்துள்ளது.



  • Jul 14, 2024 17:23 IST
    இந்தியா 10 ஓவருக்கு 75/3 குவிப்பு

    இந்திய அணி முதல் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், சுப்மன் கில் 13 ரன்னிலும், அபிஷேக் சர்மா 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    சஞ்சு சாம்சன் 27 ரன்னிலும் ரியான் பராக் 17 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.



India Zimbabwe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment