India vs West Indies 3rd odi updates: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, முன்னதாக டி20 தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில், 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டியிலேயே, இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. பின் சுதாரித்துக்கொண்ட இந்திய அணி, இரண்டாவது போட்டியில் தக்க பதிலடி கொடுத்தது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற சமநிலையில் இருந்தது.
இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி, கட்டாக்கில் இன்று மதியம் 1.30 மணியளவில் துவங்கியது. டி20 தொடரை போன்றே, இந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஆட்டம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆன்லைனில் ஹாட் ஸ்டாரில் போட்டியை காணலாம். தவிர, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பூரன் 64 பந்துகளில் 89 ரன்களும், பொல்லார்ட் 51 பந்துகளில் 74 ரன்களும் விளாசினார். இந்த 74 ரன்களில் 7 சிக்ஸர்கள் அடங்கும்.
பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
49 பந்தில் 50 ரன்னைத் தொட்ட இந்தியா, 96 பந்தில் 100 ரன்னைத் தொட்டது. லோகேஷ் ராகுல் 49 பந்திலும், ரோகித் சர்மா 52 பந்தில் அரைசதம் அடித்தனர்.
இந்தியாவின் ஸ்கோர் 21.2 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா 63 பந்தில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் 89 பந்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட் தலா 7 ரன்களிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடித்தார். 6-வது விக்கெட்டுக்கு கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார்.
கடைசி 24 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை கீமோ பால் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி க்ளீன் போல்டானார். அவர் 81 பந்தில் 85 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், காட்ரெல் வீசிய 48-வது ஓவரில், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால், 48.4வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா வென்றது.