Advertisment

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : புஜாரா சதம், கேப்டன் ரஹானே ஏமாற்றம்

Ajinkya Rahane : ரஹானே, 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 20 இன்னிங்ஸ்களில் 5 முறை மட்டுமே அரைசத்தையே, ரஹானே கடந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sports, Cricket, India, West Indies A

Sports, Cricket, India, West Indies A, Cheteshwar Pujara, West Indies A vs India, Ajinkya Rahane, India in West Indies, Rohit Sharma, Hanuma Vihari, Rishabh Pant, KL Rahul, Mayank Agarwal, Virat Kohli, Jonathan Carter, Jahmar Hamilton, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஏ, புஜாரா, ரோகித் சர்மா, ரஹானே

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ரோகித், விஹாரி உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisment

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டுவென்டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றியுள்ள நிலையில், டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற முழுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்றுள்ளது.

ரஹானே கேப்டன் : பயிற்சி ஆட்டம் என்பதால் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக அஜங்கியா ரஹானே செயல்படுகிறார். டாஸ் வென்ற ரஹானே, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நிதான ஆட்டம் : துவக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கே.எல்.ராகுல் 36 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 12 ரன்களிலும் நடையை கட்டினர்.

ரஹானே ஏமாற்றம் : கேப்டன் ரஹானே, 1 ரன்னில் ஜோநாதன் கார்டரிடம் விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார். ரஹானே, 2017 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஒரு சதம் கூட அடிக்கவில்லை. கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில், 20 இன்னிங்ஸ்களில் 5 முறை மட்டுமே அரைசத்தையே, ரஹானே கடந்துள்ளார்.

ரோகித் அசத்தல் : அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாராவுன் ஜோடி சேர்ந்து இருவரும் இணைந்து 132 ரன்கள் சேர்த்தனர். 68 ரன்களில் ரோகித் வெளியேறினார்.

புஜாரா சதம் : சட்டேஸ்வர் புஜாரா அதிரடியாக விளையாடி 187 பந்துகளில் சதம் கடந்தார். காயம் ஏற்பட்டதால், விளையாடமுடியாமல் பெவிலியின் திரும்பியுள்ளார்.

இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், ஜோநாதன் கார்டர் 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

India West Indies Ajinkya Rahane Pujara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment