காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா- பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய ஆட்டம் இன்று நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முனிபா அலி மற்றும் இரம் ஜாவித் களமிறங்கினர். 3 பந்துகள் மட்டுமே சந்தித்த இரம் ஜாவித் ரன் எதுவும் எடுக்காமல், பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பிஸ்மா மரூப், முனிபா அலி ஆகியோர் நேர்த்தியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
முனிபா அலி 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸரும் அடங்கும். மற்ற வீராங்கனைகளான பிஸ்மா மரூப் 17 ரன்னும், ஒஸ்மானியா சோகைல் 10 ரன்னும், ஆயிஷா நஸீம் 10 ரன்னும், அலியா ரியாஸ் 18 ரன்னும், பாத்திமா சனா 8 ரன்னும், கெய்னத் இம்தியாஷ் 2 ரன்னும், டயானா பெய்க் 0 ரன்னும், துபா ஹாசன் 1 ரன்னும் எடுத்திருந்தனர்.
அனம் அமின் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் நின்றனர். முன்னதாக ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் நேக் ரானா, ராதிகா யாதவ் தலா 2 விக்கெட்டும், ஷபாலி வர்மா, ரேணுகா சிங், மேக்னா சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்கிறது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
ஷபாலி வர்மா 9 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரியுடன் 16 ரன்கள் குவித்து முனிபா அலியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து சபினேனி மேக்னா, மந்தனா ஜோடி பாகிஸ்தான் வீராங்கனைகள் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
அதிரடியாக ஆடிவரும் மந்தனா 30 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு 65 பந்துகளில் 32 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ருதி மந்தனா அரை சதம் அடித்தார். இந்த நிலையில் இந்தியா 11.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி மந்தனா 63 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“