அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து

PM Congratulations To Indian Team : ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர் சுனில் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

By: Updated: January 19, 2021, 08:08:40 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் கடந்த 15-ந் தேதி பிரிஸ்பேனில் தொடங்கிய 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 1988-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி அதன்பிறகு 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்தது. இதனால் 4-வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் இந்திய அணி பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவும் என முன்னாள் வீரர்கள் பலர் ஆரூடம் கூறினார்கள்.

ஆனால் அவர்களின் கணிப்பை பொய்யாக்கிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரபலங்கள் பலர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்ர் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி குறித்து பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் ஆற்றலும் ஆர்வமும் முழுவதும் வெளிப்பட்டது. அனைத்து வீரர்களின் உறுதியும், கூட்டு முயற்சியும் தான் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் ”என்று பதிவிட்டுள்ளார்.

கபாவில் (பிரிஸ்பேன்) பெற்ற அசத்தல் வெற்றியின் மூலம், இந்தியா  பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசிநாளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் 89 ரன்ளும், சுப்மான் கில் 91 ரன்களும் குவித்தனர். டிராவிட்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியின் மன்னன் என்று வர்ணிக்கப்படும் சத்தேஸ்வர் புஜாரா  211 பந்துகள் 56 ரன்கள் எடுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:India win alan border sunil gavaskar trophy pm congratulations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X