Advertisment

கோடிக் கணக்கான இதயங்கள் நின்று துடித்த இறுதிப் போட்டி; உலகக் கோப்பையை வென்று இந்தியா மகிழ்ச்சி!

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கும் தோல்விக்குப் பிறகு, ரோஹித் சர்மா அணிக்கு வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Indian Team 1

பார்படாஸில் ஜூன் 29, 2024 சனிக்கிழமை பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவலில் நடந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிக் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். (AP Photo/Ramon Espinosa)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கும் தோல்விக்குப் பிறகு, ரோஹித் சர்மா அணிக்கு வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். இந்த டி20 உலகக் கோப்பையைப் போலவே, அவர்கள் அப்போதும் தோற்கடிக்கப்படவில்லை, ஆனால், இங்கே அவர்கள் உண்மையிலேயே முக்கியமான ஆட்டத்தை வென்றனர்.

Advertisment

மிகவும் பரபரப்பான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில், மூன்று இந்திய வீரர்கள் கடுமையான அழுத்தத்தில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா, இரண்டு ஐ.பி.எல் மாதங்களாக தேசம் இடைவிடாமல் கூச்சலிட்ட மனிதர்; லோட்ஸ்டார் ஜஸ்பிரித் பும்ரா, தான் ஏன் சிறந்த டி20 பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் காட்ட வேண்டியிருந்தது; இன்னொருவர் அர்ஷ்தீப் சிங், இந்திய அணி அவரை இந்த உலத்தைவிட அதிகமாக நம்பியது. தென்னாப்பிரிக்கா, கையில் 6 விக்கெட்டுகள் மீதம் இருக்கையில், 24 பந்துகளில் 26 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்களுடைய ஆட்டம் கைவிட்டுப் போயிருந்தது.

ஹென்ரிச் கிளாசென்னு 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்த நிலையில், ஹர்திக் மிகவும் பதற்றமில்லாத அந்த தென்னாப்பிரிக்க வீரரை வெளியேற்றுவதற்காக தந்திரமாக அவுட் சைடில் பந்து வீசி நழுவிச் சென்றார்.

அடுத்த ஓவரில், ஜஸ்பிரித் பும்ரா டேவிட் மில்லர் மீதான அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய கடைசி பேட்டர் மார்கோ ஜான்சனை வெளியேற்றியது மட்டுமல்லாமல், 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி 2 ஓவர்களில் இந்த ரன் கணக்கு 19 ஆக இருந்தபோது, ​​​​அர்ஷ்தீப் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தர். அவர் தொடங்கியதை முடிக்க பாண்டியா திரும்பினார், இந்த அழுத்தத்தில் எல்லைக் கோட்டில் சிக்ஸர் சென்ற பந்தை கேட்ச் பிடிக்காமல் விட்டிருந்தால் இந்த வெற்றி நடந்திருக்காது: சூர்யகுமார் யாதவின் கனவு முயற்சி. மில்லர் ஒரு ஃபுல் டாஸ் வலுவாக அடித்திருந்தார், சூர்யகுமார் எங்கிருந்தோ திடீரென வந்து பவுண்டரி கயிறுக்கு அருகில் பந்தைப் பிடித்து, பந்தை மெதுவாக வெளியே தூக்கி போட்டு, பவுண்டரி லைனுக்கு அப்பால் சென்று மீண்டும் உள்ளே வந்து பந்தைப் பிடிது அவுட் ஆக்கியது, மிகவும் நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இதைப் பார்த்த அனைவரும், திரையில் மூழ்கிப் போனார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பார்ப்பதை கற்பனை செய்து பாருங்கள். 

ஹர்திக் ஆட்டத்தை முடித்தார், பின்னர், முறியடித்தார். மற்றவர்களும் அப்படியே செய்தனர்.

ரோஹித் சர்மா டிரஸ்ஸிங் அறைக்குள் மறைவாக சென்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தார். களத்தில், அதே கரீபியன் பிராந்தியத்தில் 2007-ல் இந்தியாவின் மிகவும் அவமானகரமான உலகக் கோப்பை பிரச்சாரத்தை மேற்பார்வையிட்ட முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், இப்போது மீண்டெழுந்து வெற்றிக் களிப்புடன் ஈரமான முகத்துடன் இருந்தார்.

ஹர்திக் கடந்த 6 மாதங்களில் தனது கொந்தளிப்பைப் பற்றி பேசுகிறார் - அதில் அவர் ரோஹித்துக்கு பதிலாக மும்பை இந்திய கேப்டனாக மாற்றப்பட்ட நேரம் மற்றும் அணியின் தோல்வி மற்றும் அவருடைய ஃபார்முக்காகவும் களத்திலும் வெளியேயும் ட்ரோல் செய்யப்பட்ட நேரம்.

“இது மிகவும் உணர்ச்சிவசமானது, ஏதோ கிளிக் ஆகவில்லை (எனக்கு), ஆனால், இது முழு தேசமும் விரும்பிய ஒன்று. எனது 6 மாதங்களுக்குப் பிறகு எனக்கு சிறப்பு, நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, விஷயங்கள் நியாயமற்றவை, ஆனால், நான் ஜொலிப்பதற்கு ஒரு நேரம் இருக்கும் என்று எனக்குத் தெரியும்” என்று அவர் கூறினார். விரைவில் ரோஹித் டிவி தொகுப்பாளர் மற்றும் ஹர்திக் இருவரையும் ப்ரேமுக்குள் அழைத்து இந்தியாவின் கடைசி அதிரடி ஹீரோவுக்கு முத்தம் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட இதயத்தை நொறுக்கும் தோல்விக்குப் பிறகு, ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு வெற்றியைப் பகிர்ந்துகொண்டார். இந்த டி20 உலகக் கோப்பையைப் போலவே, அவர்கள் அப்போதும் தோற்கடிக்கப்படவில்லை, ஆனால், இங்கே அவர்கள் உண்மையிலேயே முக்கியமான ஆட்டத்தை வென்றனர்.  “நிறைய அதிக அழுத்தம் கொண்ட ஆட்டம், நாங்கள் தவறான பக்கத்தில் இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்பதில் அழுத்தம் இருக்கும்போது நண்பர்களே புரிந்துகொண்டோம், நாங்கள் கடினமான சூழ்நிலையில், விலகிச் செல்லாமல் உறுதியாக இருந்தோம்” என்று அவர் தனது வார்த்தைகளில் மூச்சு விடாமல் கூறினார்.

மற்றொரு பழைய சாதகமான விஷயம், விராட் கோஹ்லி, மிகப்பெரிய நாளில் மிகவும் அமைதியாக அனைத்து போட்டிகளையும் வழிநடத்துவதற்கு முன்பு அவரது பேட் அமைதியாக இருந்தது. அவரது கண்ணீரை அடக்குவது கடினமாக இருந்தது. இந்திய இன்னிங்ஸில், அவர் ஆரம்ப விக்கெட்டுகளுக்குப் பிறகு கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டார் மற்றும் 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவர் தனது டி20 ஓய்வையும் அறிவிப்பார், இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

“இது இந்தியாவுக்கான எனது கடைசி டி20, நான் அதை அதிகம் பயன்படுத்த விரும்பினேன் ... கோப்பையை உயர்த்த விரும்பினேன் ... சூழ்நிலையை கட்டாயப்படுத்துவதைவிட மதிக்க விரும்பினேன்” என்று அவர் கூறுகிறார்.

இந்த சிறந்த த்ரில்லரில் ஒரு பங்கைக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் மற்றும் இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு அவர்களின் கடந்தகால வெள்ளை-பந்து அணிகள் அனைத்தையும் நலிவடையச் செய்த C-வார்த்தையிலிருந்து தப்பிக்க கிட்டத்தட்ட ஒரு வழியைக் கண்டறிந்த தென்னாப்பிரிக்கர்களைப் பற்றி சிந்தியுங்கள். கிளாசென் அதிரடியான தாக்குதல் வேலையை வழிநடத்தியபோது, ​​அது வரலாறானது என்று தோன்றியது, ஆனால், இறுதியில் அவர்கள் முடித்தபோது வெறும்கைதான் மிஞ்சியது. 

ஒரு குறுகிய காலத்திற்கு, ரோஹித் மற்றும் டிராவிட் மற்றொரு உலகக் கோப்பை பிரச்சாரத்தின் முடிவில் வெறுமையின் உணர்வு தங்களுக்கு காத்திருக்கிறது என்று வருத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், விஷயங்கள் எப்படி மாறியது.

மாறுபட்ட பேட்டிங் மற்றும் கேப்டன்சி அணுகுமுறைகள் கொண்ட இரு வேறுபட்ட நபர்கள்; ரோஹித் மற்றும் டிராவிட் அவர்களின் நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையின் போது இதேபோன்ற கிரிக்கெட் வீழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உலக அளவில் கிரிக்கெட் வீரர்களாகப் போற்றப்பட்ட அவர்கள், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரைக் கொண்ட அணிகளின் ஒரு பகுதியாக இருப்பதால், அவர்கள் எப்போதும் இரண்டாவது சிறந்தவர்களாகக் குறிக்கப்பட்டனர். கடவுள் அல்லது அரசனின் ஆட்சியில், அவர்கள் சராசரி பெயர்களைக் கொண்ட பொதுவானவர்கள். டிராவிட்  ‘தி கிரேட் வால்’, ரோஹித் ஹிட் மேன்.

உலகக் கோப்பைகள் இருவரிடமும் கருணை காட்டவில்லை. 2015-ல், ரோஹித் ஐந்து சதங்கள் அடித்தார், ஆனால், இந்தியா அரையிறுதியில் கவிழ்ந்தது. கடந்த ஆண்டு, கேப்டனாக சொந்த மண்ணில் உலகக் கோப்பையை உயர்த்திய தோனியைப் போல செய்ய மிகவும் நெருக்கமாக இருந்தார். இறுதிப் போட்டியில், அவர் ஒரு ஷாட்டைத் தவறவிட்டார் மற்றும் பீல்டரான ஆஸி டிராவிஸ் ஹெட், சாத்தியமில்லாத கேட்சைப் பிடித்தார்.

அன்று, டிரஸ்ஸிங் ரூமின் ஒரு மூலையில், 1 லட்சம் பேர் கொண்ட அஹமதாபாத் ஸ்டேடியத்தில் அவர் அழுதார். 2007-ல் டிராவிட் ஒருமுறை ஏமாற்றத்தில் கதறி அழுத தொலைதூர பார்படாஸில் இந்த முறை அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

2007 அணி லீக் கட்டத்தை தாண்டத் தவறிய பிறகு, ரசிகர்களின் சீற்றம் மோசமாக மாறியது. வீரர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன, அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. அணியில் உள்ள அனைவரும் தங்கள் குடும்பங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அவர்கள் வீடு திரும்புவதற்கு பயந்தனர். இந்த முறை விமானம் திரும்பிச் செல்வது மிகவும் வசதியாக இருக்கும். கடந்த ஆண்டு இதயத்தை உடைக்கும் 2 ஐசிசி நிகழ்வு இறுதி தோல்விகளுக்குப் பிறகு - ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், நவம்பரில் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை - டிராவிட்டின் சீடர்கள் "ராகுல் பாய்" ஒரு மறக்கமுடியாத பிரியாவிடை பரிசை வழங்குகிறார்கள்.

2007-ல் இருந்ததைப் போலல்லாமல், இந்த அழகிய கரீபியன் தீவுகளில் இருந்து விமானம் புறப்படும்போது, ​​டிராவிட் மற்றும் இந்திய அணி வீட்டிற்குச் செல்ல ஆர்வமாக இருக்கும். அவர்களுக்கு வெகுமதிகள், டிக்கர்-டேப் அணிவகுப்பு, திறந்த-பஸ் கொண்டாட்டங்கள் மற்றும் லோக் கல்யாண் மார்க்கிற்கு சாத்தியமான பயணம் ஆகியவை காத்திருக்கின்றன.

எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி வெற்றியை "ஷாந்தர்" என்றும் தேசத்தை ஊக்குவிக்கும் வெற்றி என்றும் அழைக்கிறார். “சாம்பியன்ஸ்! நம்முடைய அணி டி20 உலகக் கோப்பையை நாட்டிற்கு கொண்டு வருகிறது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பார்படாஸில், இந்தியா, உலகின் மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட அணி, அவர்களின் பெரிய போட்டியின் மனோபாவத்தை கேள்விக்குள்ளாக்கிய விமர்சகர்களை மௌனமாக்கியது, டைட்டிலை வெல்ல முடியாத நிதி அதிகார மையத்தின் தோல்வியை கேலி செய்தது. இந்திய கிரிக்கெட்டின் கஜானா எப்போதும் கோப்பைகளால் ஜொலிக்கும், ரோஹித் மற்றும் சக வீரர்கள் கோப்பையைப் பெற்றனர்.

T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment