/indian-express-tamil/media/media_files/IYMdYAIeMWkORX0C33Pl.jpg)
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்று 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்த நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது X பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது " என வாழ்த்தியுள்ளார்.
CHAMPIONS!
— Narendra Modi (@narendramodi) June 29, 2024
Our team brings the T20 World Cup home in STYLE!
We are proud of the Indian Cricket Team.
This match was HISTORIC. 🇮🇳 🏏 🏆 pic.twitter.com/HhaKGwwEDt
போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார்.
அவர், “ஒருபோதும் தளராத மனப்பான்மையுடன், கடினமான சூழ்நிலைகளை சமாளித்து, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி, டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒரு அசாதாரண வெற்றியாகும். டீம் இந்தியா உங்களை நினைத்து பெருமைப்படுகிறோம்!” என்று கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "அற்புதமான உலகக் கோப்பை வெற்றி. போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். டீம் இந்தியா நம் நாட்டை பெருமைப்படுத்தி விட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.
Congratulations to Team India on a spectacular World Cup Victory and a phenomenal performance throughout the tournament!
— Rahul Gandhi (@RahulGandhi) June 29, 2024
Surya, what a brilliant catch! Rohit, this win is a testament to your leadership. Rahul, I know team India will miss your guidance.
The spectacular Men in… pic.twitter.com/lkYlu33egb
முதல்வர் ஸ்டாலின், 2-வது டி20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் இந்தியா வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையை பெற்றுள்ளது. வாழ்த்துகள், இந்திய அணி” எனத் தெரிவித்துள்ளார்.
Thrilled to celebrate our #MenInBlue for clinching their second #T20WorldCup with complete dominance!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2024
Our Indian team showcased unparalleled brilliance in challenging conditions, finishing with an unbeaten record.
Congratulations, Team India! 🇮🇳🏆#INDvSApic.twitter.com/DlYX2fXfcm
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.