9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்; இந்தியா பவுலிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி மகளிர் அணி பவுலிங் செய்தது. மகளிர் நியூசிலாந்து அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சோஃபி டெவின் அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். தொடக்க வீராங்கனை ஜார்ஜியா ப்ளிம்மர் 34 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 161 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. 11 ஓவர்களுக்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா 5 விக்கெட்டை பறிகொடுத்தது. பவுலிங்கில் மிரட்டி எடுத்த நியூசிலாந்து இந்தியாவை 102 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. இதன் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அந்த அணி சார்பில் பவுலிங்கில் அசத்திய ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டையும், லியா தஹுஹு 3 விக்கெட்டையும், அமெலியா கெர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தியா vs நியூசிலாந்து - இரு அணிகளின் பிளேயிங் 11
இந்திய மகளிர் அணி: ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்
நியூசிலாந்து மகளிர் அணி: சுசி பேட்ஸ், ஜார்ஜியா ப்ளிம்மர், அமெலியா கெர், சோஃபி டெவின் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ் (விக்கெட் கீப்பர்), ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், லியா தஹுஹு, ஈடன் கார்சன்
இந்தியா மற்றும் நியூசிலாந்து - டி20 உலகக் கோப்பை சாதனை
இந்தியா– போட்டிகள்: 36; வெற்றி: 20; தோல்வி: 16
நியூசிலாந்து – போட்டிகள்: 36; வெற்றி: 24; தோல்வி: 12.
இந்தியா vs நியூசிலாந்து - நேருக்கு நேர்
பெண்கள் டி20 போட்டிகளில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 13 போட்டிகளில் மோதியுள்ளது. இதில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 2022 இல் நடந்த கடைசி போட்டி உட்பட, கடைசி ஐந்து மோதல்களில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா vs நியூசிலாந்து போட்டிகள்: 13; நியூசிலாந்து வெற்றி: 9; இந்தியா வென்றது: 4
கடைசி ஐந்து போட்டிகள்: நியூசிலாந்து: 4, இந்தியா : 1.
இரு அணி வீராங்கனைகள் பட்டியல்:
இந்தியா: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பாட்டீல் .
நியூசிலாந்து: சோஃபி டெவின் (கேப்டன்), சுசி பேட்ஸ், ஈடன் கார்சன், இஸி கேஸ், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, ஃபிரான் ஜோனாஸ், லீ காஸ்பெரெக், அமெலியா கெர், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர், ஹன்னா ரோவ், லியா தஹு .
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.