இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20: தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றி!

93-2 விக்கெட்டுகள் என்று நல்ல நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்த 40 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது

ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று நடைபெற்ற இந்தியா, தென்னாப்பிரிக்க மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் இன்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் ஹர்மன்பரீத் கவுர் 48 ரன்கள் எடுத்தார்.

ஒருக்கட்டத்தில் 93-2 விக்கெட்டுகள் என்று நல்ல நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்த 40 ரன்களை எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இருப்பினும், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

×Close
×Close