சஞ்சு, திலக் வர்மாவுக்கு இடம் இல்லை... இந்திய உலகக் கோப்பை அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அணியை அறிவித்தனர்.

உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அணியை அறிவித்தனர்.

author-image
WebDesk
New Update
India World Cup squa

ஆசியக் கோப்பைக்காக தற்போது இலங்கையில் இருக்கும் சஞ்சு சாம்சனுடன், திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.

India World Cup Squad Announcement: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே வெளியிட்ட செய்திகளின்படி, கடந்த சனிக்கிழமை இரவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்  (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முடிவு செய்தது. இந்த நிலையில், இன்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவித்தனர். 

இந்த அணியில் கே.எல் ராகுல் இடத்துக்கு போட்டி போட்ட சஞ்சு சாம்சனுக்கு இடம் பெறவில்லை. இதேபோல் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வினுக்கும் இடம் கிடைக்கவில்லை. ஆசியக் கோப்பைக்காக தற்போது இலங்கையில் இருக்கும் சஞ்சு சாம்சனுடன், திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பில்லை.  

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி:-
 ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (வி.சி), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி , முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா. 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Sport Worldcup Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: