Indian-cricket-team: இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சாய் சுதர்ஷன் கடந்த ஞாயிற்றுக்கிழமை 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து, தனது அறிமுக ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து வரலாறு படைத்தார்.
சாய் சுதர்ஷன், இந்தச் சாதனையுடன், ராபின் உத்தபா, கே.எல். ராகுல் மற்றும் ஃபைஸ் ஃபசல் ஆகியோருக்குப் பிறகு அவர்களது ஒருநாள் போட்டியில் 50+ ரன்கள் எடுத்த நான்காவது தொடக்க ஆட்டக்காரர் என்கிற சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் யார் என்கிற தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அது சச்சின் டெண்டுல்கரோ, சேவாக்கோ, தோனியோ, விராட் கோலியோ இல்லை என்பது உறுதி.
ஒருநாள் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் வலது கை பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் ஆவார். இவர் தான் சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர். கடந்த ஜூன் 11, 2016 அன்று ஹராரேயில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியாவுக்காக தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமான ராகுல், கிரீஸில் இருந்தபோது 115 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 100* ரன்கள் எடுத்தார்.
43வது ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு சிக்சருடன் 100 ரன்களை குவித்தார் கேஎல் ராகுல். இந்திய அணியின் வெற்றிக்கு 2 பந்துகள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ரன் வேட்டை நடத்தி இருந்தார்.
அந்த போட்டியில், கே.எல்.ராகுல் தனது அறிமுக ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 86 ரன்கள் குவித்த ராபின் உத்தப்பாவின் சாதனையை முறியடித்தார். ராபின் உத்தப்பா 2006ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“