எங்களது வெற்றிகளின் அவரின் பங்கு அதிகமாக இருக்கிறது. அதனால் அவருக்காவே இந்த உலககோப்பையை நாங்கள் வெல்வோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023 உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனையத்து நாளை (நவம்பர் 19) அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள உலககோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், இந்த போட்டி உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த 2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இதில் கங்குலி தலைமையிலான இந்திய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது,
அதன்பிறகு இந்திய அணி 2011-ல் இந்தியாவில் நடந்த உலககோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றிருந்தாலும் 2003-க்கு பிறகு இந்திய ஆஸ்திரேலியா அணியை உலககோப்பை இறுதிப்போட்டியில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதன் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த் தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளர்.
இதனிடையே உலககோப்பை இறுதிப்போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு பயிற்சியாளர் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் பங்கு மிகவும் பெரியது. அவர் எப்படி கிரிக்கெட் விளையாடினார். நான் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். எங்களின் இருவரின் ஆட்டமும் மாறுபட்டது. ஆனாலும் நாங்கள் விளையாடும் வகையில் சுதந்திரமாக விளையாட போதுமான ஆதரவை கொடுக்கிறார்.
அரையிறுதிவரை சென்று தோல்வியை சந்தித்த 2022-ம் ஆண்டு டி20 உலககோப்பை தொடர் போன்ற தருணங்களில் அவர் வீரர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இது போன்ற கடினமாக தருணங்களில் அவர் வீரர்களுக்கு அறிவுரை மற்றும் தகவல்கள் கொடுத்து உதவியது சிறப்பாக இருந்தது. எனவே இந்த பெரிய போட்டியில் அவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதால் எங்கள் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். அவருக்காக நாங்கள் உலககோப்பை வெல்ல வேண்டும்.
இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தப்படியாக அதிக ரன்கள் குவித்த டிராவிட் இதுவரை உலககோப்பை தொடரை வெல்லாத நிலையில், இந்த கோப்பை இந்தியா வென்றால் அவருக்கு மகிழ்ச்சியான தருணமாக அமையும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“