டயப்பர் பையனுக்கு கோலியின் தயவால் அணியில் இடம் கிடைக்குமா? அசர வைக்கும் பேட்டிங் (வீடியோ)

கொல்கத்தாவில் சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ கடந்த சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித். இந்திய கிரிக்கெட் அணியின் Master Blaster ஆக இருக்கும் சச்சின் டெண்டுல்கரை…

By: Updated: December 14, 2019, 09:05:16 PM

கொல்கத்தாவில் சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ கடந்த சமூக வலைதளங்களில் வைரலானது. இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித். இந்திய கிரிக்கெட் அணியின் Master Blaster ஆக இருக்கும் சச்சின் டெண்டுல்கரை ரோல் மாடலாக கொண்டு விளையாடி வருகிறான்.


இவரின் கிரிக்கெட் ஷாட்டுகளை கவனித்த, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், இந்திய கேப்டன் விராட் கோலியை, தனது இன்ஸ்டாவில் டேக் செய்து, “உங்கள் அணியின் இவனை சேர்த்துக் கொள்ளுங்கள். இவனை அணியில் தேர்வு செய்வீர்களா?? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..

இதற்கு பதலளித்த விராட் கோலி, “இந்த சிறுவன் எந்த பகுதியைச் சேர்ந்தவன்? இவன் ஆட்டத்தை நம்பமுடியவில்லை” என்று பதிலா அளித்திருக்கிறார்.


ஹேல்மெட், சேஃப் கார்டு, க்ளவுஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஷாஹித்தின் வீடியோ Samsofshd SK என்ற ஃபேஸ்புக் கணக்கில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த சிறுவனது கிரிக்கெட் ஆட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பிரமாதமான வரவேற்பு கிட்டி வருகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Indian captain virat kohli impressed by unreal talent recommended by kevin pietersen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X