இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றிய அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதில் ரசிகர்களின் ஆர்வம் எல்லை இல்லாதது. Finger Tip-ல் தகவல்களை வைத்திருப்பார்கள். அதேசமயம், ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களுக்கு பக்கபலமாக நிற்கும் அவர்களது மனைவிகள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
ஆனால், சாக்ஷி தோனி, அனுஷ்கா கோலி போன்ற வைரல் ஹிட் மனைவிகள் குறித்து தெரிந்த அளவுக்கு மற்ற வீரர்களின் மனைவிகள் குறித்து தெரிந்து வைத்திருப்பதில்லை. தெரிவதும் இல்லை.
ஸோ, முன்னாள், இந்நாள் இந்திய வீரர்களின் மனைவிமார்கள் குறித்த அப்டேட் இங்கே,
ஹேசல் கீச்:
'செய்... ஏதாவது செய்' என்று தல அஜித்தின் பில்லா படத்தில் ஹிட் அடித்த பாடலின் நாயகி தான் நம்ம யுவராஜ் சிங்கின் மனைவி ஹேசல் கீச். இங்கிலாந்தின் பிறந்த வளர்ந்த ஹேசல், 2016ல் யுவியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதே, தனது பெயரை 'குர்பாஸந்த் கவுர்' என்று மாற்றிக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a29-3-200x300.jpg)
நடாஷா ஸ்டான்கோவிக்
நடாஷா ஸ்டான்கோவிக் எனும் மாடலை, கடந்த ஜனவரி.2ம் தேதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை “Starting the year with my firework ❣️” என்று வெளியிட்டு சமூக தளங்களை ஃபயர் ஆக்கினார் ஹர்திக் பாண்ட்யா.
‘டிஜே வாலே பாபு’-னு ஒரு ஹிப்ஹாப் ராப் ஆல்பம் பார்த்து இருக்கீங்களா?…. அதில் பிரபலமானவர் தான் நடாஷா ஸ்டான்கோவிக். செர்பியன் மாடலான இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்து பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட, நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a30-3-300x217.jpg)
அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார். திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான நடாஷாவுக்கு இன்று தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தீபிகா பல்லீகள் கார்த்திக்
நம்ம ஊரு பையன் தினேஷ் கார்த்திக்கின் மனைவி, தீபிகா. தேசிய ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகாவை, தினேஷ் 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தினேஷின் முதல் மனைவி நிகிதா என்பவர் தான். ஆனால், இருவரும் பிரிய, நிகிதா மற்றொரு கிரிக்கெட் வீரரான முரளி விஜய்யை திருமணம் புரிய, தினேஷ் கார்த்திக் தீபிகாவை கரம் பிடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a31-3-215x300.jpg)
நுபூர் நகர்:
ஏதோ தெரு பெயர் என்று நினைத்துவிட வேண்டாம், அணியின் ஸ்விங் மன்னன் புவனேஷ் குமாரின் மனைவி தான் நுபூர் நகர். டீம்-ல புவனேஷ் குமார் இருக்குற இடமே தெரியாது, அவ்ளோ அமைதியா இருப்பாப்ல... அதேமாதிரி மனைவியை தேடித் கண்டுபிடித்து கல்யாணம் பண்ணியிருப்பார் போல. நீங்கள், மறந்தும் கூட, இவர் மனைவியை சமூக தளங்களில் கூட காண முடியாது. அவ்ளோ ஹோம்லி பெண்ணாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a32-2-246x300.jpg)
ஆயீஷா முகர்ஜி:
ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆங்லோ - பிரிட்டிஷ் பெண்ணான ஆயீஷா தான் நம்ம ஷிகர் தவானின் மென்ட்டல் ஸ்ட்ரென்த், ஃபிஸிக்கல் ஸ்ட்ரென்த் எல்லாமே.
/tamil-ie/media/media_files/uploads/2020/07/a33-1-300x185.jpg)
34 வயதான ஷிகர், 44 வயதான ஆயீஷாவை 2012ல் திருமணம் செய்து கொண்டார். ஆயீஷாவுக்கு இது 2வது திருமணமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil