'மூவர்ண பிரிண்ட்... யங் எனர்ஜி... ஸ்வெட் ஸோன்'! - அசத்தும் இந்திய உலகக்கோப்பை ஜெர்ஸி

உலகக்கோப்பை 2019 தொடர், மே மாதம் தொடங்கவிருக்கிறது. இதை முன்னிட்டு, நைக் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இது உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை கௌரவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது 50 ஓவர் கிரிக்கெட்டில் 1983 மற்றும் 2011ஆம் ஆண்டுகளிலும், டி20 கிரிக்கெட்டில் 2007ஆம் ஆண்டும் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. இதுதொடர்பாக நைக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மைதானங்கள் மற்றும், 83’, 07’ மற்றும் 11’ ஆகிய ஆண்டுகளில் பெற்ற வரலாற்று வெற்றிகள் உள்ளிட்டவை ஜெர்சியின் உட்புறம் அச்சிடப்பட்டுள்ளன. இந்திய இளம் கிரிக்கெட் அணியின் ஆற்றலைக் குறிக்கும் வகையில், காலருக்கு அடியில் ஆரஞ்சு நிறம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், சுவாசிப்பதில் சிக்கல் இல்லாத வகையிலும் ஜெர்ஸி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், புதிய ஜெர்சியை அணிந்து இந்திய வீரர்கள் தோனி, கோலி, ரஹானே, ப்ரித்வி ஷா, ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளிட்டோரும் போஸ் கொடுத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close