worldcup 2023 | indian-cricket-team | bcci: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கியது. 10 அணிகள் களமாடியுள்ள இந்த தொடரின் தொடக்கப் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது. இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அதன் தொடக்கப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வருகிற ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டது.
இந்நிலையில், இந்த பயிற்சியின் போது இந்திய வீரர்கள் முழுமையாக காவி நிறத்திற்கு மாறிய இந்திய ஜெர்சியை அணிந்து இருந்தார்கள். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆரஞ்சு நிற ஜெர்சியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காவி மயமாகிறதா இந்திய கிரிக்கெட்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Virat Kohli and Jasprit Bumrah having fun in the practice session. pic.twitter.com/DlF1DuUueC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 6, 2023
இந்திய கிரிக்கெட் அணி என்றாலே நீலம் நிறம் தானே. அதை இப்படி காவி நிறத்துக்கு மாற்றி விட்டார்களே என்றும் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். எனினும் இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்று பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 2011ல் இதே போன்ற ஜெர்சியை தான் இந்திய வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி ஜெர்சி முதல்முறையாக காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது பகுதியளவு காவி நிறம் இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது முழுமையாகவே காவி நிறம் பூசப்பட்டுளளது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.