New Update
/indian-express-tamil/media/media_files/Cx63DrRoURnfCB1Vhukv.jpg)
இந்திய கிரிக்கெட் அணி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்துவிட்டு இந்திய அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Read In English : Team India to play three match T20I and ODI series against Sri Lanka in Pallekele and Colombo
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. உலககோப்பை தொடரில் பங்கேற்ற விராட்கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.
சுப்மான் கில் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய இளம்படை, முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், 2-வது மற்றும் 3-வது போட்டியில் தொடர் வெற்றியை பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடர் வரும் ஜூலை 14-ந் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்திய அணி அடுத்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் ஜூலை 26-ந் தேதி தொடங்குகிறது. அடுத்து 27 மற்றும் 29-ந் தேதி அடுத்த இரு போட்டிகளும் நடைபெற உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், ஆகஸ்ட் 4 மற்றும் 7-ந் தேதி அடுத்த இரு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் டி20 தொடர் பல்லகிலே மைதானத்திலும், ஒருநாள் போட்த்தொடர் கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளது.
ஜிப்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காத இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பலரும் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் போட்டித்தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.