Advertisment

சென்னை 28 3-ம் பாகத்திற்கு தயாரான அஸ்வின் : வெங்கட் பிரபு என்ன சொன்னார்?

இந்தியாவின் டி20 அணிக்கு திரும்பியதில் இருந்து, அஸ்வின் பேட்டிங்கில் மொத்தம் 27 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
சென்னை 28 3-ம் பாகத்திற்கு தயாரான அஸ்வின் : வெங்கட் பிரபு என்ன சொன்னார்?

டி20 உலககோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தியா கடைசி பந்தில் வெற்றி பெற்ற நிலையில், வெற்றிக்கான ரன்னை எடுத்த தமிழக வீரர் அஸ்வினின் ஆட்டம் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தை நினைவுபடுத்துவது போல் அமைந்துள்ளது.

Advertisment

கடந்த 2007-ம் ஆண்டு வெங்கட் பிரபு அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவில் நுழைந்த படம் சென்னை 28. நட்பு காதல் மற்றும் இரு ஏரியாக்களுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டியை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இளைஞர்களின இயக்குனர் என்ற பெயரை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு சென்னை 28 படத்தில் 2-ம் பாகமாக சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் என்ற பட்ம வெளியானது. அப்போது இந்த படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின், “என்ன ஒரு அற்புதமான படம் ‘சென்னை 28 II’. என் வாழ்க்கையை முழுமையாக ரிவைண்ட் செய்தது போலவும், நான் அதில் ஒரு பகுதியாக உண்மையிலேயே நான் அதில் ஒரு பகுதயாக இருந்தது போல் உணர்ந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனிடையே தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் மனம் கவர்ந்த திரைப்படத்தின் லைவ் ஷோவை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காட்டியுள்ளார் அஸ்வின். இந்த போட்டியின் கடைசி ஓவரில் பேட்டிங் இறங்கிய அஸ்வின் பந்துவீச்சாளர் முகமது நவாஸ் வைடு பந்து வீச ஊக்கப்படுத்து விதமாக விளையாடினார். இந்த போட்டியில் கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்னை அஸ்வின் எடுத்தார்.

இதனிடையே எதிரணி வீரர் வைடு பந்து வீச ஊக்கப்படுத்திய அஸ்வினை நினைத்து பெருமைகொள்கிறோம் என்று சென்னை 28 படத்தில் 5 வினாடி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு.

சென்னை 28 படத்தில் சாக்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 5 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். அப்போது களமிறங்கும் இம்ரான் கேரக்டர், 3 ஸ்டெம்புகளையும் பந்துவீச்சாளருக்கு தெரிவது போன்று விலகியிருப்பார். ஆனால் பந்துவீச்சாளர் அவர் காலடியில் பந்து வீசும்போது இம்ரான் கேரகடர் ஒதுங்கிவிடுவதால் பந்து வைடாக போய்விடும். இதனால் சாக்ஸ் அணிக்கு கூடுதலாக ஒரு ரன் கிடைக்கும்.

அஸ்வினின் சினிமா மீதான காதல் அவரது சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளிப்படுத்தும். அந்த வகையில் தனது மனம் கவர்ந்த சென்னை 28 படத்தின் ஒரு காட்சியை மெல்போர்ன் மைதானத்தில் சுமார் 90,000 க்கும் அதிகமானோர் முன்னிலையில் மற்றும் டிவியில் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது ரீகிரியேட் செய்துள்ளார் லைவாக.

கடைசி ஓவரின் ஹர்திக் பாண்டியாவால் ஆட்டத்தை முடிக்க முடியாத நிலையில், ஃபினிஷராக இருந்த தினேஷ் கார்த்திக், வந்த வேகத்திலேயே ஸ்டெம்பிங் முறையில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து அஸ்வின் உள்ளே வருகிறார். 36 வயதான அஸ்வின் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் இந்தியாவின் ஒயிட் பால் அணிக்கு திரும்பினார்.

முன்னதாக மூன்று ஓவர்கள் வீசிய நிலையில், அஸ்வின் விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. அவரது ஓவரில் மசூத் அடித்த கேட்ச வாய்ப்பு கூட ஸ்பைடர் கேம் கேபிளில் பட்டு டெட்பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையேதான் டி 20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிக முக்கியமான கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இந்தியாவின் டி20 அணிக்கு திரும்பியதில் இருந்து, அஸ்வின் பேட்டிங்கில் மொத்தம் 27 பந்துகளை மட்டுமே சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

ஆனால் தற்போது வெற்றியின் விளம்பில் உள்ள இந்திய அணிக்கு நவாஸ் எப்படி பந்துவீச போகிறார் என்பதை அஸ்வின் சரியாக அறிந்திருந்தார். அதனால் அஸ்வின் ஸ்டெம்புகளை விட்டு விலகி நின்றார். அப்போது நவாஸ் பந்து வீசியவுடன் அஸ்வின் கிரீஸ்க்கு உள்ளே வந்துவிட்டதால், பந்த் லெக் ஸ்டம்பிற்கு அருகில் சென்றது. இதை பார்த்த அம்பயர் ராட் டக்கர் வைட் சைகை காட்டினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை இருந்ததில் 4 பந்துகளில் 14 ரன்கள் கிடைத்தது. இதனால் 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்று வரும்போது, ​​​​இந்த இலக்கை கிட்டத்தட்ட அடைந்துவிட்டதால் மக்கள் நிதானமாகவோ அல்லது அதிக உற்சாகமாகவோ இருப்பார்கள் பின்னர் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனார். அதன்பிறகு களமிறங்கிய அஸ்வின் மிகவும் தைரியமான விஷயத்தை செய்ததால் பந்து வைடாக மாறியது என்று போட்டிக்குப் பின் என்று விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறியிருந்தார்.

மறுமுனையில் நின்ற கோலி, கிரிக்கெட் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நவாஸ் அந்த பந்தை லெக் சைடுக்கு கீழே வீசியதையும், அவரது பேட்டை நகர்த்துவதில் ஒரு தசையையும் அசைக்காமல் இருப்பதையும் பார்த்தார். 2016 ஆம் ஆண்டில் அவர் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட சிறிது நேரத்திலேயே, இயக்குனர் பிரபு பதிலளித்து, அப்போதைய ஐசிசி ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் அதை கிட்டத்தட்ட திரைப்படமாக எடுத்ததாகக் கூறினார்.

"இந்தப் பகுதியில் அவர் ஒரு சிறிய கேமியோவில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் அவர் தனது கிரிக்கெட் அர்ப்பணிப்புகளில் பிஸியாக இருந்ததால் அது நிறைவேறவில்லை. வருங்காலத்தில் படத்தின் மூன்றாம் பாகம் நடந்தால் நிச்சயம் அவரைக் நடிக்க வைப்போம் என்று கூறியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment