'ஆசிய விளையாட்டு கிரிக்கெட் மைதானம் இதுவா? பவுலர்ஸ் பாவம்!' பிரபல வீரர் அனுதாபம்

ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானம் ஹாங்சோவில் உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானம் ஹாங்சோவில் உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.

author-image
WebDesk
New Update
Indian cricketer Badrinath on Pingfeng Campus Cricket ground Hangzhou

முன்னாள் இந்திய வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சீன கிரிக்கெட் மைதானத்தை குறிப்பிட்டு கிண்டலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Asian-games 2023 | indian-cricket-team | ruturaj-gaikwad:சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. 

Advertisment

மகளிர் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து, நாளை புதன்கிழமை முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, பஹ்ரைன் என மொத்தம் 15 அணிகள் களமாட உள்ளன. இந்திய அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஹாங்சோ கிரிக்கெட் மைதானம் எப்படி? 

இந்நிலையில், போட்டிகள் நடக்கும் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானம் ஹாங்சோவில் உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. இது 1,347 பேர் அமரும் இருக்கை கொண்ட ஒரு சாதாரண மைதானமாக உள்ளது. இங்கு நடந்த 16 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 8ல் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பவுலிங் செய்த அணி 7ல் வென்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்சின் சராசரி ரன்கள் 108; 2வது இன்னிங்சின் சராசரி ரன்கள் 65 ஆகும். 

இருப்பினும், மைதானத்தின் பவுண்டரி வெறும் 45 முதல் 50 மீட்டர் வரை தான் உள்ளது. அதனால், இந்தியா போன்ற முன்னணி அணி களமிறங்கும் போது சிக்ஸர் மழைக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், பேட்ஸ்மேன்களை சமாளிப்பது கடினமாக இருக்கும் என்றும், பவுலர்கள் பாவம் என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். 

பத்ரிநாத் அனுதாபம்

Advertisment
Advertisements

இந்நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுப்பிரமணியம் பத்ரிநாத் சீன கிரிக்கெட் மைதானத்தை குறிப்பிட்டு கிண்டலாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இதுதான் மைதானம் என்றால், நான் 43 வயதில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன். பந்துவீச்சாளர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணி

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், சிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Ruturaj Gaikwad Asian Games Indian Cricket Team

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: