இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்ளை வீழ்த்திய இந்தியாவின் குல்தீப் யாதவ், இதை சக வீரரான அஸ்வினுக்கு சமர்ப்பிப்பதாக கூறிபலரின் இதயங்களை வென்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசலாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 218 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக க்ரெவ்லி 79 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் இந்திய வீரர்களின் தோழமை பந்தம் களத்தில் அணியின் மன உறுதியை வலுப்படுத்தியது என்று சொல்லலாம். இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றிய நிலையில், 5 விக்கெட் கைப்பற்றிய குல்தீப் யாதவ்க்கு அந்த இன்னிங்சின் பந்து வழங்கப்பட்டது. ஆனாலும் அனுபவ வீரரான அஸ்வின் தான் இந்த பந்தை வைத்துக்கொள்ள தகுதியானவர் என்று கூறி குல்தீப் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளர்.
தனது 100-வது டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்தபின் இந்திய அணியியுடன் களத்தில் இருந்து வெளியேறிய அஸ்வின் 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதற்காக குல்தீப் மரியாதை செலுத்தியுள்ளார். அதேபோல் குல்தீப் யாதவ் இந்த போட்டியின் மூலம் தனது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கையை 50-அக உயர்த்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“