இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் சொந்த ஊர் சேலம் சின்னப்பம்பட்டி ஆகும். இங்குள்ள கல்லூரி ஒன்றில் நடராஜனுக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்குபெற்ற நடராஜன் கிரிக்கெட் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது, “நான் சாப்பாட்டுக்கே வழி இல்லாத ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன். மண் குடிசைதான் என் வீடு. கட்டாந்தரையில் படுத்து தூங்குவேன். வாழ்க்கையில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். சிலருக்கு உடனே உதவிகள் கிடைக்கும், சிலருக்கு தாமதம் ஆகும். வாழ்க்கையில் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றிகள் கிடைக்கும். கிரிக்கெட்டில் என் அண்ணன் அறிவுரையை கேட்டுதான் விளையாடுவேன்” என்றார்.
தொடர்ந்து, கிரிக்கெட் தல தோனி, திரையுலக தல அஜித் குமார் மாணவ- மாணவிகள் கேள்வியெழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த நடராஜன், “அஜித் குமார் மிகவும் பண்பான மனிதர். என்னுடைய பிறந்தநாள் விழாவில் பிரபலங்களை அவரே கவனித்தார். அஜித் சாரை பார்க்கும்போது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும்” என்றார்.
தொடர்ந்து சேவாக் குறித்து பேசிய நடராஜன், “எனக்கு தமிழ் தவிர எதுவும் தெரியாது. இந்தி தெரியாம கஷ்டமா இருந்துச்சு. எனக்கு சேவாக் சார் ரொம்ப சப்போர்ட் செய்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு காயம் ஏற்பட்டது. அப்போது முதலில் குடும்பத்தை பாரு எல்லாம் சரி ஆகிவிடும் எனக் கூறினார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டால் எதையும் சாதிக்கலாம்” என்றார் என நடராஜன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“