Advertisment

வீட்டுல குவா குவா… முதல் டெஸ்டில் விளையாடுவாரா ரோகித்?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு நேற்று இரவு இரண்டாவதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rohith

ரோஹித் சர்மாவிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்திய  கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அவருடைய மனைவி ரித்திகா சஜ்தே ஆகியோருக்கு நேற்றிரவு குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை அவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ உறுதிப்படுத்தவில்லை. எனினும், சமூக ஊடகத்தில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் சமைரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அவரின் மனைவி ரித்திகா தம்பதியினருக்கு தற்போது 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ரோஹித் சர்மா மும்பையிலேயே இருந்து வந்தார்.  இதனிடையே ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா கர்ப்பமாக இருப்பதால், ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லவில்லை என்று கூறப்பட்டது.

கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மாவுடன்  ரித்திகா எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியை காண வந்த போது ரித்திகா கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் 2வது குழந்தையை வரவேற்க தயாராகி வந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரித்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்துள்ளது.  இந்த தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் முடிவடைந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.  தற்போது ஆண்குழந்தை ஒன்றும் பிறந்திருப்பதால் அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதில் ரோஹித் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோஹித் இந்தப் போட்டியில் விளையாடாத பட்சத்தில் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் உடன் கில், கே.எல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூவரில் ஒருவர் விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket Rohit Sharma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment