/tamil-ie/media/media_files/uploads/2020/02/shreyas-iyer-2.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது தாயார் ரோகிணி ஆகியோர் ரூ.2.9 கோடி மதிப்பிலான 525 சதுர அடியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஐ.பி.எல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது.
சமீபகாலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், இரானி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். இது இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை மீட்பதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்கள் திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது தாயார் ரோகிணியுடன் இணைந்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். 525 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ரூ.2.90 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் வாங்கியுள்ளார். இந்த அபார்ட்மெண்ட் மும்பை வோர்லியின் ஆதர்ஷ் நகர் பகுதியில் உள்ள திரிவேணி இண்டஸ்ட்ரியல் சி.எச்.எஸ்.எல்.,லின் 2வது மாடியில் உள்ளது. செப்டம்பர் 19, 2024 அன்று இந்த வீடு வாங்கப்பட்டதாக "Zapkey ஆல் அணுகப்பட்ட சொத்து பதிவு ஆவணங்கள்" தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.