Advertisment

'இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு': இந்திய வீரர் நடராஜன் பேட்டி

'தற்போது உள்ள இளம் வீரர்கள் நல்லவிதமாக விளையாடுகிறார்கள். இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம்.' என இந்திய வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian cricketer T. Natarajan latest speech in Coimbatore Tamil News

இந்திய வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய உணவு கடையை திறந்து வைத்தார்

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

இந்திய வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் புதிய உணவு கடையை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் நடராஜன். அப்போது அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு காயம் காரணமாக விளையாட முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக விளையாடினேன். சையத் முஷ்டாக் அலி டிராபி கோப்பைக் காண போட்டி நடைபெற உள்ளது. அதில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை போட்டியில் இடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். விளையாடுவதை சிறப்பாக விளையாடலாம் மீதி கடவுள் பார்த்துக் கொள்வார்.

publive-image

தற்போது உள்ள இளம் வீரர்கள் நல்லவிதமாக விளையாடுகிறார்கள். இந்திய அணியில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது நல்ல விஷயம். அவர்கள் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்." என்று கூறினார்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடராஜன், 'சூழ்நிலை காரணமாக இவ்வாறு அவர்கள் உருவாகிறார்கள். தமிழக அரசு இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், அருகில் இருப்பவர்களும் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Coimbatore Natarajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment