Indian cricketer Veda Krishnamurthy – cricketer Arjun Hoysala viral pics Tamil News: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விளையாடி வருபவர் வேதா கிருஷ்ணமூர்த்தி. முன்னணி வீராங்கனையான இவர் கர்நாடகாவில் பிறந்தவர். கொரோனா காலத்தில், இவர் தனது சகோதரி மற்றும் தாயார் என இருவரையும் அடுத்தடுத்து இழந்து சோகத்திற்கு ஆளானார். இந்த துயர சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் இருந்து வந்த அவர், தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், வேதா கிருஷ்ணமூர்த்தி தனது நண்பரான கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவை திருமணம் செய்ய உள்ளார். நேற்று அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில், அவரும் வேதாவும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர், வேதா முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தும், அவருக்கு மோதிரம் அணிவிப்பதுமாக இருந்தது.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் நிலையில், தனது காதலை வேதா ஏற்று கொண்டார் என அர்ஜுன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பதிவில் கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரும் வாழ்த்துகளை மழை பொழிந்து வருகிறார்கள்.

இந்திய வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி இதுவரை 48 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி 829 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 8 அரை சதங்களும் அடங்கும். இதுதவிர, 76 சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 875 ரன்களை எடுத்துள்ளார். இதேபோன்று, அர்ஜூன் கர்நாடக ரஞ்சி அணியில் விளையாடி வருகிறார். மேலும், கர்நாடக பிரீமியர் லீக்கின் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி – அர்ஜுன் ஹொய்சாலா ‘லவ் ப்ரபோஸ்’… வண்ணப் படங்கள்…




தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil