பிரபல நடிகரை மொத்தமாக சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்: வைரல் போட்டோ
ஐதராபாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெலுங்கு திரைப்பட நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indian Cricketers Met Jr NTR Ahead Of ODI Series Against New Zealand | see Viral Photos
இந்தியா வருகை தரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், இவ்விரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது.
Advertisment
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்திலும், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திலும் முறையே ஜனவரி 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
இதைத்தொடர்ந்து, இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி ராஞ்சி, லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மூன்று மைதானங்களில் விளையாடப்பட உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. எனவே, இந்த தொடரையும் கைப்பற்றும் நம்பிக்கையில் இந்தியா களமாட உள்ளது.
ஜூனியர் என்.டி.ஆருடன் போஸ் கொடுக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
Advertisment
Advertisement
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ஐதராபாத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெலுங்கு திரைப்பட நட்சத்திரம் ஜூனியர் என்.டி.ஆர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சாஹல், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், ஜூனியர் என்.டி.ஆருடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்து கொண்டார். அங்கு அவரும் பிரபல நடிகருமான ராம்சரண் இணைந்து நடித்து நடனமாடிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு கூத்து' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்த விருதை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார்.
மேலும், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் விமர்சகர்கள் தேர்வு விருதையும் பெற்று, விருதுகளை வென்றது. அதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பெற்றுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“