இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் சர்ப்ரஸ் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்திருந்தாலும், அவர் அவுட் ஆன விதம் குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலந்து அணி 218 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5, அஸ்வின் 4, ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதனிடையே இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரின் சதம், படிக்கல், சர்ப்ரஸ் கான் ஆகியோரின் அரைசதம் கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் சர்ப்ரஸ் கான், இந்த போட்டியில், 60 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 56 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அறிமுக வீரர் படிக்கல்லுடன் இணைந்து 97 ரன்கள் குவித்த சர்ப்ரஸ் கான், தேநீர் இடைவேளைக்குப் பிறகு வந்த முதல் பந்தில் ஆட்டமிழந்து அரைசதத்தை சதமாக மாற்றும் வாய்ப்பினை தவறவிட்டர். இந்த போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஷுப்மான் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது விக்கெட் எண்ணிக்கையை 699-ஆக மாற்றினார். அப்போது இந்திய அணி 279 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை பறிகொடுத்திருந்தது.
கில்லுக்கு பின் களமிறங்கிய சர்ப்ரஸ்கான், அதிரடியாக விளையாடிய நிலையில், மார்க் வுட் பந்துவீச்சில், இரண்டு ஓவர்களில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருக்கு அடித்தார். இவர்களின் கூட்டணி இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோது, பஷீர் பந்துவீச்சில், தேவையில்லாத ஷாட் ஆடி ஸ்லிப்பில் நின்ற ரூட்டிடம் கேட்ச் கொடுத்து சர்ப்ரஸ்கான் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன விதம் குறித்து விமர்சித்துள்ள முன்னாள் கேப்டன் கவாஸ்கர், டான் பிராட்மேன் தனக்கு கொடுத்த அறிவுரையை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் சர்ப்ராஸ் ஆடிய ஷாட் திருப்தியாக இல்லை. பந்து பிட்ச் அப் ஆனது அவர் ஆடிய ஷாட்டுக்கு போதுமானதாக இல்லை. அதற்காக விலையான தனது விக்கெட்டை பறிகொடுத்தவிட்டார். தேநீர் இடைவேளைக்கு பிறகு முதல் பந்தை நீ விளையாடுகிறாய். இதில் கவனமாக இருக்க வேண்டும். டான் பிராட்மேன் என்னிடம் ‘’நான் 200 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தாலும், ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ளும்போது, நான் 0 ரன்னில் இருப்பதாக நினைத்துக்கொள்வேன் என்று கூறியதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
376 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எனற நிலையில் இருந்த இந்தியா, அடுத்து 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 428/8 என்று சரிந்தது. அறிமுக ஆட்டத்தில் அரைசதம் அடித்த படிக்கல், துருவ் ஜூரல் ஆகிய இருவருமே பஷீரின் சிறப்பான பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜாவை டாம் ஹார்ட்லி எல்.பி.டபிள்யூ.வில் வீழ்த்திய நிலையில், அதன் பிறகு தனது 100வது டெஸ்டில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் டக் அவுட்டாக வெளியேறினார்..
ஜூரல் அவுட் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், ஜூரல் அவுட் ஆன விதமும் திருப்தியாக இல்லை. இளம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்டரை 'மற்றொரு எம்எஸ் தோனி' என்று முத்திரை குத்திய கவாஸ்கர், அவர் அந்த ஷாட்டை விளையாட வேண்டிய அவசியமில்லை. அவர் விளையாடியத்தில் எந்த அர்த்தமும் இல்லை," என்று அவர் கூறினார்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.