/tamil-ie/media/media_files/uploads/2023/06/tamil-indian-express-2023-06-05T202403.032.jpg)
Indian Grand Master D Gukesh achieves career-best live ratings by holding Magnus Carlsen for a draw Tamil News
Indian Grand Master D Gukesh achieves career-best live ratings by holding Magnus Carlsen for a draw Tamil News
Indian Grand Master D Gukesh - World No. 1 Magnus Carlsen Tamil News: 11வது நார்வே செஸ் போட்டி நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் களமாடிய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடி அசத்தினார். அவர் போட்டியின் நான்காவது சுற்றில் கார்ல்சனை 82 நகர்வுகளில் டிரா செய்தார். இருப்பினும், டை-பிரேக்கிங் ஆர்மெகாடனில் குகேஷை விட வெற்றிபெற்று அரை புள்ளியை அதிகமாக எடுத்தார்.
இந்நிலையில், 1.6 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற குகேஷ் 2739 என்ற அதிகபட்ச லைவ் ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளார். உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சன் 2853 என்ற அதிகபட்ச லைவ் ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டில் குகேஷ் இரண்டாவது முறையாக கார்ல்சனை டிரா செய்துள்ளார். இந்த ஆண்டு விஜ்க் ஆன் ஜீ-வில் (நெதர்லாந்து) நடந்த டாடா ஸ்டீல் கார்ல்சனுக்கு எதிரான போட்டியில், குகேஷ் 46 நகர்வுகளில் டிரா செய்து அசத்தி இருந்தார்.
முன்னதாக, நான்காவது சுற்றில் கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானா கிளாசிக்கல் ஆட்டத்தில்கிராண்ட் மாஸ்டர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவை தோற்கடித்து நான்கு புள்ளிகளுடன் போட்டியில் முன்னிலை பெற்றார். அவர் இப்போது 2787.9 லைவ் ரேட்டிங் புள்ளிகளுடன் உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதிகபட்ச லைவ் ரேட்டிங் சாதனை படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது.
Congrats Grand Master @DGukesh on achieving a career-high live rating of 2739 with your impressive, intense and hard-fought game against Carlsen in the @NorwayChess.
May you soar to greater heights and continue to make Chennai, the Chess capital of India proud. pic.twitter.com/BcMgTwH8sA— M.K.Stalin (@mkstalin) June 5, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.