Global Chess League - Gukesh D - Magnus Carlsen Tamil News: முதலாவது குளோபல் செஸ் லீக் போட்டிகள் வருகிற 21ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை துபாய் செஸ் மற்றும் கலாச்சார கிளப்பில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ், கங்காஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ், திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ், பாலன் அலாஸ்கன் நைட்ஸ், அப்கிரேடு மும்பா மாஸ்டர்ஸ், சிங்காரி கல்ஃப் டைட்டன்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் களமாடுகின்றன.
இந்த அணிகளில் உலகின் டாப் கிராண்ட்மாஸ்டர்களான மேக்னஸ் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரன், விஸ்வநாதன் ஆனந்த், இயான் நெபோம்னியாச்சி மற்றும் உலகின் முன்னணி பெண் வீராங்கனையான ஜிஎம் ஹூ யிஃபான் ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், கோனேரு ஹம்பி மற்றும் ஹரிகா துரோணவல்லி மற்றும் ரௌனக் சத்வானி போன்ற இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த போட்டியில் பங்கேற்கும் 6 அணிகளில் எஸ்.ஜி ஆல்பைன் வாரியர்ஸ் அணியில் இளம் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் டி, பிரக்ஞானந்தா ஆர் மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் உள்ளனர். இந்த மூவருடன் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனும் இணைந்து ஐகான் வீரராக அணியை வழிநடத்துகிறார். இரினா க்ருஷ் மற்றும் எலிசபெத் பாட்ஸ் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மகிழ்ச்சியில் குகேஷ்
இந்நிலையில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சமீப காலம் வரை உலக சாம்பியனாக இருந்த மேக்னஸ் கார்ல்சனுடன் அணியைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தற்காக தான் மகிழ்ச்சியடைவதாகவும், தொடரின் போது அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்பாதாகவும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் நார்வே போட்டியில் இருந்த போது ஒரே குளோபல் செஸ் லீக் அணியில் சேர்க்கப்பட்டோம் என்பதை நான் அறிவேன். ஆனால் அவர் எந்த அணியில் சேர்க்கப்பட்டார் என்பது கூட அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் போட்டியில் இருந்ததால் அதைப் பற்றி பேசிக் கொள்ளவில்லை.
நான் குளோபல் செஸ் லீக்கில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளவேன் என நம்புகிறேன். நாங்கள் விளையாட்டுகளைப் பற்றி விவாதிக்கலாம் மற்றும் ஒரு குழுவாக நாம் சிறிது ஒன்றாக வேலை செய்யலாம் (வியூகம் மற்றும் சதுரங்க தந்திரங்களில்). மேக்னஸுடன் செஸ் ம் பற்றி விவாதிக்க நான் நம்புகிறேன். அவருடன் அதிகம் விளையாடி அனுபவம் எனக்கு அதிகம் இல்லை. அதனால் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்
நிச்சயமாக, அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் ஒன்றாக வேலை செய்யப் போகிறோமா அல்லது தனி நபர்களாகப் பணிபுரிவோமா என்று. ஆனால் அவரிடமிருந்து முடிந்தவரை கற்றுக் கொள்வேன் என்று நம்புகிறேன்" என்று குகேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகிறார்.
முன்னதாக, குளோபல் செஸ் லீக் போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கார்ல்சன், “தனிப்பட்ட முறையில் நான் ஒரு அணியாக விளையாடுவதை மிகவும் ரசிக்கிறேன். அது நான் எப்பொழுதும் எதிர்நோக்கும் ஒன்று. அணியில் உள்ள மற்ற வீரர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இளம் தலைமுறை இந்திய வீரர்களுக்கு எதிராகவும் போட்டியிடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்தியா இதுவரை பல சரியான விஷயங்களைச் செய்கிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் அது உலகின் முன்னணி செஸ் நாடாக இருப்பதற்கு இன்னும் குறைவான காலம் தான் எடுக்கும்." என்று அவர் கூறியிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil