காமன்வெல்த் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஆட்டத்தில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியை தழுவினார்.
மும்முறை தாண்டுதல் போட்டி
ஆண்கள் டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்க பதக்கத்தையும், அப்துல்லா அபூபக்கர் வெள்ளியையும் வென்றனர்.
வரலாறு படைத்த மகளிர் ஹாக்கி
ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 16 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கம் வென்றது. இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றது.
நிகத் ஜரீன் தங்கம்
நடப்பு உலக சாம்பியனான நிகத் ஜரீன், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் வட அயர்லாந்தின் கார்லி மெக்னாலை எதிர்கொண்டார். தொடக்கச் சுற்றுக்குப் பிறகு நிகாத் ஜரீன் 10-9 என முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து, வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை தோற்கடித்தார். முதல் இரண்டு சுற்றுகளில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜரீன், மூன்றாம் ஆட்டத்தை பாதுகாப்பாக நேர்த்தியாக ஆடி தங்கப் பதக்கம் வென்றார்.
டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு
டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. இவர்கள் இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டனர்.
சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
குத்துச் சண்டையில் தங்கம்
காமன்வெல்த் குத்துச்சண்டைப் போட்டியில் மகளி்ருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் நீத்து கங்காஸ் தங்கம் வென்றார்.
அதேபோல் ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்றார்.
வரலாறு படைத்த இந்திய வீரர்
காமன்வெல்த் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் இந்திய வீரர் அவினாஸ் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டிகளில் 1998 முதல் 2018ஆம் ஆண்டுவரை கென்ய வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil