ISL 2018-19 Chennaiyin FC squad : இந்தியன் சூப்பர் லீக்கின் ஐந்தாவது சீசன் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில், தொடக்க போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, முதல் போட்டியில் 30-ம் தேதி பெங்களூரு எஃப்.சி அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது. சென்னை நேரு அரங்கத்தில், முதல் போட்டி அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. அந்தப் போட்டியில் சென்னையின் எஃப்.சி கோவா அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐஎஸ்எல் சாம்பியன் சென்னையின் எஃப்.சி அணி, புதுப்பொலிவோடு அடுத்த சீசனுக்குத் தயாராகியுள்ளது. பயிற்சியாளர் குழு முதல், வீரர்கள் வரை சில மாற்றங்கள் செய்து, கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்போடு பயிற்சி செய்து வருகிறது.
மலேசியாவில் 'ப்ரீ- சீசன்' பயிற்சியை முடித்துக்கொண்டு சனிக்கிழமை சென்னை திரும்பிய அணியின் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. தன் பயிற்சிக் குழுவையும், வீரர்களையும் பயிற்சியாளர் ஜான் கிரகரி அறிமுகப்படுத்திவைத்தார். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற அணியை வழிநடத்திய ஹென்ரிக் செரேனோ, சென்னை அணியிலிருந்து விலகிவிட்டதால், மற்றொரு டிஃபண்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் இந்த ஆண்டு அணியை வழிநடத்த உள்ளார்.
All you know about Indian Super League (ISL) 2018-19 Chennaiyin FC Squad: சென்னையின் எஃப்சி அணி வீரர்கள் விவரம்
கோல் கீப்பர்கள்: கரன்ஜித் சிங், சஞ்சிபன் கோஷ், நிகில் பெர்னார்ட்
டிஃபென்டர்கள்: மெய்ல்சன் ஆல்வ்ஸ், எலி சபியா, இனிகோ கால்ட்ரென், ஜெர்ரி லால்ரின்சுலா, டோன்டோன்பா சிங், லால்டின்லியானா ரென்த்லெய், சோமிங்லியானா ரால்டே, ஹென்றி ஆண்டோனே.
மிட்ஃபீல்டர்கள்: ரஃபெல் அகஸ்டோ, க்ரெகோரி நெல்சன், ஆண்ட்ரியா ஓர்லாண்டி, ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னாண்டஸ், தோய் சிங், அனிருத் தாபா, ஜெர்மன்பரீத் சிங், சீனிவாசன் பாண்டியன், ஐசக் வன்மல்ஸாமா, பெதஷ்வோர் சிங், சுனுன்மாவியா.
ஃபார்வேர்ட்ஸ்: ஜேஜே லால்பெக்லா, முஹம்மத் ரஃபி, கார்லஸ் ஆண்டோனியோ சலோம்.