Advertisment

விண்டீசுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! தோனிக்கு இடம் கிடைத்ததா?

தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Team for first 2 ODIs against Windies announced

Team for first 2 ODIs against Windies announced

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், முதல் 2 ஆட்டங்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, மனீஷ் பாண்டே, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது, ஷர்துள் தாகுர் ஆகியோர் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முன்னதாக, இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தோனி நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பரவலாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கடந்த இரு நாட்களாக இந்த செய்தி பரவி வந்தது.

ஆனால், இதுகுறித்து நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இன்று வெளியிட்டிருந்த பிரத்யேக செய்தியில், தோனி அணியில் இடம் பெறுவார் என்றும், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்று தெரிவித்திருந்தோம். அந்த பிரத்யேக செய்தியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

அதன்படி, தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தோனியும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mahendra Singh Dhoni India Vs West Indies
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment