தோனி அணியில் இருந்து நீக்கப்படுவதாக வரும் செய்தி உண்மையா?

பட்! என்னதான் நிலவரம் என்பதை அறிய, சற்று உள்ளே உள்ளே புகுந்து நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்து முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீசின் ‘போட்டி’ எடுக்கப்பட்டது.

நாளை (அக்.12) இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அணி விவரம் தெரிந்து கொள்ள Click Here

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக டாக் ஆஃப் தி டவுன் என்னவென்றால், ‘வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐந்த போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்டு அவருக்கு பதில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட உள்ளார்’ என்பதே!.

அப்படியா! என்று நாமும் சற்றே ஷாக்காகிப் போனோம், பட்! என்னதான் நிலவரம் என்பதை அறிய, சற்று உள்ளே புகுந்து நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல் இதுதான்.

அதாகப்பட்டது, ரிஷப் பண்ட்டை அணியில் சேர்ப்பதில் பிசிசிஐ நிர்வாகம் மிக உறுதியாக உள்ளது. ஆனால், தல தோனிக்கு பதிலாக அல்ல… தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக தான் என்று கூறப்படுகிறது.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராகும் விதமாக, தோனிக்கு தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வாய்ப்பளிக்கவே பிசிசிஐ விரும்புகிறதாம்.

அதேசமயம், ரிஷப் பண்ட்டின் சிறப்பான பெர்ஃபாமன்ஸ் காரணமாக, ரிசர்வ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ள தினேஷ் கார்த்திக்கை நீக்கும் முடிவில் தான் பிசிசிஐ உள்ளதாக செய்திகள் கசிகிறது.

பெர்ஃபாமன்ஸ் பொறுத்தவரை, இந்த ஆண்டு 15 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 225 ரன்களே அடித்துள்ளார். ஆவரேஜ் 28.12.

இருப்பினும், தோனியின் மெகா அனுபவம் உலகக் கோப்பையில் கைக்கொடுக்கும் என பிசிசிஐ உறுதியாக நம்புகிறது. அதனால், தோனியை நீக்குவது என்ற சிந்தனைக்கு இந்திய அணி நிர்வாகம் இடம் தரவில்லை என்றே தெரிகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கணித்தது போலவே ஒருநாள் அணியை அறிவித்த பிசிசிஐ – படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close