இந்தியாவின் எவர்கிரீன் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பாபு நட்கார்னி மரணம் : பிரபலங்கள் இரங்கல்

Babu Nadkarni passes away : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டரும், தலைசிறந்த பவுலர்களில் ஒருவருமான ரமேஷ்சந்திர கங்காராம் பாபு நட்கார்னி ( வயது 86), வயது முதிர்வின் காரணமாக மும்பையில் காலமானார்.

By: Updated: January 18, 2020, 05:38:10 PM

Babu Nadkarni passes away : இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டரும், தலைசிறந்த பவுலர்களில் ஒருவருமான ரமேஷ்சந்திர கங்காராம் பாபு நட்கார்னி ( வயது 86), வயது முதிர்வின் காரணமாக மும்பையில் காலமானார்.

விவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

1955ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பாபு நட்கார்னி, தான் விளையாடியுள்ள 41 டெஸ்ட் போட்டிகளில் 1414 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பேட்டிங் ஆவரேஜ் 25.70 சதவீதம் ஆகும். 88 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தியதே இவரது சிறந்த பவுலிங் ஆகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9165 பந்துகள் வீசி 2559 ரன்கள் மட்டுமே வழங்கி இந்திய அணியின் சிறந்த எகானமி பவுலராக திகழ்ந்து வந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில், 2000 முறை பந்துகள் வீசி 1.67 சதவீத ரன்களை மட்டுமே வழங்கியுள்ளார். 1964ம் ஆண்டில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 21 மெய்டன் ஓவர்களை நட்கார்னி வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்தர கிரிக்கெட்டில், 10000 முறை பந்துகள் வீசி 1.64 சதவீத ரன்களை மட்டுமே வழங்கியுள்ளார்.

பாபு நட்கார்னியின் மரணத்தை அவரது மருமகன் உறுதிப்படுத்தியுள்ளாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாபு நட்கார்னியின் மறைவிற்கு சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபு நட்கார்னி, இந்திய அணியின் தேசிய தேர்வுக்குழு கமிட்டியின் உறுப்பினர் ஆகவும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் கவுரவ இணை செயலாளராகவும் பதவி வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Indian team former all rounder babu nadkarni passes away sachin tendulkar amitabh bachchan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X