/tamil-ie/media/media_files/uploads/2018/10/d447.jpg)
Indian team squad announced for 2nd test match vs WI
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. இதில், ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
2 வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை அக்.12 முதல் 16 வரை நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Team India for the 2nd Test against Windies at Hyderabad ???????? #INDvWIpic.twitter.com/QMgNm6jf4Q
— BCCI (@BCCI) October 11, 2018
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் லோகேஷ் ராகுல், ப்ரித்வி ஷா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துள் தாகுர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.