அரையிறுதியில் போராடி தோற்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி; 2-1 என அர்ஜெண்டினா வெற்றி

Indian women go down fighting, lose 2-1 to Argentina: அர்ஜெண்டினாவுடன் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி தோல்வி; வெண்கலப் பதக்கத்திற்கு பிரிட்டனுடன் மோதல்

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதியில் அர்ஜெண்டினாவிடம் கடைசி வரை போராடி தோல்வி அடைந்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டுக்கான, 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வரலாற்றில் முதல் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.

இந்நிலையில் இன்று நடந்த அரையிறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக இந்திய மகளிர் அணி கடுமையாக போராடி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி வெள்ளிக்கிழமை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிரிட்டனுடன் மோதவுள்ளது.

ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் கோல் அடித்ததில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் போட்டியின் முடிவு எதிரணி கேப்டன் மரியா நொயல் பாரியோனுவோவின் கைகளில் இருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முந்தைய ஆட்டங்களை விட விளையாட்டின் மிகப்பெரிய மேடையான ஒலிம்பிக்கில் இரு அணிகளின் ஆட்டத்தில் கடுமையான போட்டி நிலவியது.

குர்ஜித்- ந் பெனால்டி கார்னர் மூலம் அருமையான தொடக்கத்துடன் இந்திய அணி முன்னிலைப் பெற்றதால், பின்னர் அர்ஜென்டினா அணி முதல் 15 நிமிடங்களில் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

அர்ஜென்டினா பயிற்சியாளர் கார்லோஸ் ரெடெகுய், தனது வீரர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார்.

ஆரம்பகால பின்னடைவால் அர்ஜெண்டினா அணி பதற்றமடைந்ததாகத் தோன்றியது, ஆனால் இரண்டாவது பகுதியில் அவர்கள் இந்தியர்களை கட்டுப்படுத்தி சிறப்பாக விளையாடினர். அவர்கள் பல பெனால்டி கார்னர்களைப் பெற்றனர். அதில் ஒரு பெனால்டி கார்னரை 18 வது நிமிடத்தில் பேரியோனுவோ கோலாக மாற்றினார்.

ஆட்டம் பாதி நேரத்தை நோக்கி நகர்ந்தபோது, ​​இரு அணிகளும் சிறந்த வாய்ப்புகளை வீணடித்தன. வந்தனா கட்டாரியாவின் ஒரு சிறந்த பாஸை லால்ரெம்ஸியாமியால் கோலாக்க முடியவில்லை. அர்ஜெண்டினாவும் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது. மறுமுனையில், ஜூலியட்டா ஜங்குனாஸ் இந்தியன் டி -க்குள் நல்ல நிலையில் இருந்தபோது ஏர் ஷாட் எடுத்தார்.

மூன்றாம் பகுதியின் தொடக்கத்தில் அர்ஜென்டினா முன்கூட்டியே உயர்ந்தது, மற்றும் மிட்ஃபீல்டில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 36 வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னரில் இருந்து பாரியோனுவோ இரண்டாவது கோல் அடித்தார். இது நடுவரின் பரிந்துரை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தியர்களிடமிருந்து தாக்குதல் ஆட்டம் வெளிப்படவில்லை. ஏனெனில் அவர்கள் மேலும் வாய்ப்புகளை உருவாக்க முயன்றனர். ஆனால் அர்ஜென்டினா உறுதியாக இருந்தது.

கேப்டன் ராணி அருமையாக விளையாடி கோல் அடிக்க முயற்சி செய்தார். இந்திய அணியிடம் இருந்த இடைவிடாத முயற்சியால் 10 நிமிடங்களுக்குள் ஒரு பெனால்டி கார்னர் கிடைத்தது. ஆனால் குர்ஜித்தின் கோலை அர்ஜெண்டினா கோல் கீப்பர் மரியா பெலன் சுசி தடுத்தார்.

இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டது. இந்திய அணி அடுத்து வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடவுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Indian women go down fighting lose 2 1 to argentina

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com