உலகக் கோப்பை வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் அணியை இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கவனம் ஈர்த்துள்ளார்.
ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடர் இன்னும் 5 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றன.
இந்தநிலையில், ஆறு அடி ஒன்பது அங்குலம் உயரம் உடைய இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நிஷாந்த் சரணு பாகிஸ்தான் அணியின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிஷாந்த் சரணு ஹைதராபாத்தில் பாகிஸ்தான் அணிக்கான வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களின் குழுவில் இடம்பெற்று இருந்தார். அவரது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் அடங்கிய பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழு உள்ளிட்ட அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் வலைப்பயிற்சியின்போது ஹரிஸ் ரவுஃப் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தங்கள் ஸ்பெல்களை முடித்த பிறகு இந்திய பவுலர்களை பந்து வீச அழைத்தார் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல். அப்போது பல இந்திய பந்துவீச்சாளர்களும் தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில், ஆறு அடி ஒன்பது அங்குலம் உயரம் கொண்ட நிஷாந்த் சரணு மோர்னே மோர்கல் கண்களால் ஈர்க்கப்பட்டார்.
ரவுஃப் மற்றும் ஷஹீன் போன்ற பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 140-150 கிமீ வேகத்தில் எக்ஸ்பிரஸ் வேகத்தைக் கொண்டு வருவதால், இளம் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளரான நிஷாந்த் சரணுவை வேகமாக பந்துவீசுமாறு மோர்னே மோர்கல் கூறியுள்ளார்.
நிஷாந்த் சரணு அவர்களின் முதல் பயிற்சி அமர்வில் டெயில்-எண்டர்கள் மற்றும் தொடக்க வீரர் ஃபகர் ஜமானுக்கு பந்துவீசினார். அப்போது சரணு தனது வேகத்தில் உழைத்து கூடுதல் துள்ளலை உருவாக்கினால் வெற்றி பெற முடியும் என்று ஃபகர் ஜமான் கூறியுள்ளார். சரணு 125-130 கிமீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அவரது உயரத்திற்கு இன்னும் அதிக வேகத்தில் பந்துவீசினால், இன்னும் சிறப்பாக இருக்கும் என மோர்னே மோர்கல் கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிக வேகத்தில் சரணு பந்துவீசினார். அவரது உயரம் காரணமாக பந்து எளிதாக பவுன்ஸ் ஆனது. அதனால் ஃபகர் ஜமான் அவரது பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் வெளியேறினார். அதிக பவுன்ஸ் காரணமாக தனக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என ஃபகர் ஜமான் சுதாரித்துக் கொண்டார். இதனால், சரணு பாகிஸ்தானின் பின் வரிசை வீரர்களுக்கு பந்துவீசினார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாடுவதை இலக்காகக் கொண்டுள்ள சரணு, ஹைதராபாத் அணியில் இடம்பிடிப்பதை குறுகிய கால லட்சியமாகக் கொண்டுள்ளார். அதேநேரம், பாகிஸ்தான் அணிக்கு பந்துவீசியப்போது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக வலைபயிற்சியில் பந்து வீச முடியுமா என்று மோர்னே மோர்கல் அவரிடம் கேட்டதாகவும் சரணு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“