33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 60-வது இடத்தில் உள்ளது.
தகுதிநீக்கம்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விளக்கம்
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் டாக்டர் டின்ஷா பர்டிவாலா, வினேஷ் போகத்தின் எடை குறைப்பு முயற்சிகள் குறித்து விளக்கியுள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், வினேஷ் போகத் நேற்று தொடர்ந்து 3 போட்டிகளை விளையாடி இருக்கிறர். சில நேரங்களில் தொடர்ந்து விளையாடினால் கூட உடல் எடை கூடும். அரையிறுதிப் போட்டி முடிந்ததும், அவரின் எடை அதிகரித்தது.
அதனால், வினேஷ் இரவு முழுவதும் எடையைக் குறைக்கும் பயிற்சியை மேற்கொண்டார். இருப்பினும், எடை 100 கிராம் அதிகமாக இருந்தது. ஆடையின் அளவை குறைத்தோம். தலை முடியைக்கூட வெட்டி விட்டோம். ஆனாலும், 50 கிலோவுக்கு எடையை கொண்டு வர முடியாவில்லை." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“